Advertisment

Post Office Scheme: ரூ.1411 முதலீடு செய்து ரூ. 35 லட்சம் வருமானம் பெறுங்கள்!

போஸ்டல் லைப் இன்சூரன்ஸ் மற்றும் ரூரல் போஸ்டல் லைப் இன்சூரன்ஸ் என்ற பெயரில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பல வகையான ஆயூள் காப்பீட்டுத் திட்டங்களைத் தபால் நிலையங்கள் அளிக்கின்றன.

author-image
WebDesk
New Update
rural postal life insurance, gram suraksha scheme

நிலையான வருமானம் பெறுபவர்கள் அனைவரும் நல்ல வருவாய் கொடுக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இது அவர்களின் முதுமை காலத்தில் பயனளிப்பதோடு உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது. அதனுடன் சேமிப்புத் திட்டத்திற்கு சில போனஸ்கள் கிடைத்தால் அதற்கும் வருமானவரி இருக்காது என்றால் அது மகிழ்ச்சியளிக்கும் விஷயம் தான்.

Advertisment

போஸ்டல் லைப் இன்சூரன்ஸ் மற்றும் ரூரல் போஸ்டல் லைப் இன்சூரன்ஸ் என்ற பெயரில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பல வகையான ஆயூள் காப்பீட்டுத் திட்டங்களைத் தபால் நிலையங்கள் அளிக்கின்றன. அதில் தபால் நிலையத்தின் கிராம சுரக்ஷா அல்லது முழு ஆயுள் காப்பீடு என்று அழைக்கப்படும் இந்த திட்டம் பற்றி பார்க்கலாம்.

தபால் அலுவலக கிராம் சுரக்ஷா பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது 10. அதிகபட்சம் 55 வயது வரை இருக்கலாம்.

குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 10,000 ரூபாய், அதிகபட்ச காப்பீட்டுத் தொகை10 லட்சம் ரூபாய் ஆகும்

4 வருட முதலீட்டிற்கு பிறகு கடன் வசதி கிடைக்கும்.

5 வருடங்களுக்கு முன்னதாக பாலிசியை சரண்டர் செய்தால் போனஸ் கிடைக்காது

இந்தத் திட்டத்தில் தனிநபருக்கு பிரீமியம் செலுத்தும் விருப்பங்கள் உள்ளன. அவை 55 ஆண்டுகள், 58 ஆண்டுகள் மற்றும் 60 ஆண்டுகள் ஆகும்.

தற்போது, இந்தத் திட்டத்திற்கு அஞ்சல் துறை அறுபதாயிரம் ரூபாய் போனஸ் வழங்குகிறது.

ஒரு நபர் 19 வயதில் 10 லட்சம் தொகைக்கான கிராம சுரக்ஷா காப்பீட்டை வாங்கினால், 55 வருடங்களுக்கான மாதாந்திர பிரீமியம்1515 ரூபாயாக இருக்கும். 58 வருடங்களுக்கு 1463 ரூபாயாக இருக்கும். அதுவே, 60 வருடங்களுக்கு 1141 ரூபாயாக இருக்கும்.

55 ஆண்டுகள் திட்டத்திற்கு முதிர்வுத் தொகை 31.60 லட்சம் ரூபாயாக இருக்கும். 58 வருடங்களுக்கு முதிர்வு பலன் 33.40 லட்சம் ரூபாயாக இருக்கும். 60 ஆண்டுகளுக்கு முதிர்வு பலன் 34.60 லட்சம் ரூபாயாக இருக்கும்

இந்த பாலிசியில் நாமினி வசதியும் உண்டு. ஒரு வாடிக்கையாளர் தங்கள் இமெயில் ஐடி அல்லது மொபைல் எண்ணைப் புதுப்பிக்க விரும்பினால், அவர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

அஞ்சல் காப்பீடு தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 180 5232/155232 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம். இது தவிர, http://www.postallifeinsurance.gov.in/ என்றை இணையதளத்தை அணுகி மற்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Post Office Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment