Advertisment

மாசம் ரூ. 1500 சேமிங்க; லட்சாதிபதி கனவு விரைவில் நனவாகும்

30 நாட்கள் க்ரேஸ் பீரியட் பெற்றுக் கொண்டும் நீங்கள் ப்ரீமியம் தொகையை செலுத்திக் கொள்ள இயலும். மேலும் இந்த முதலீட்டை அடிப்படையாக கொண்டு முன்பணமும் பெற்றுக் கொள்ள முடியும்.

author-image
WebDesk
Nov 30, 2021 12:17 IST
PPF Scheme; மாதம் ரூ.1000 முதலீட்டில் ரூ.18 லட்சம் வருமானம்; எப்படி தெரியுமா?

Post Office Scheme Invest Rs 1500 every month : மிகவும் பாதுகாப்பான அதே நேரத்தில் அதிகப்படியான ரிட்டர்ன்ஸ் வழங்கும் முதலீடுகளையே பெரும்பாலான முதலீட்டாளார்கள் எதிர்பார்ப்பதுண்டு. அவர்களுக்காகவே பல்வேறு சிறப்பு சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களை வழங்கி வருகிறது தபால் நிலையங்கள்.

Advertisment

தற்போது நாம் பார்க்க உள்ள இந்த திட்டத்தின் பெயர் கிராம் சுரக்‌ஷா திட்டமாகும். இதில் நீங்கள் மாதம் ரூ. 1500-ஐ ஒவ்வொரு மாதமும் சேமித்து வைத்தால் மெச்சுரிட்டி காலத்தில் உங்களுக்கு ரூ. 35 லட்சம் ரிட்டன்ஸாக கிடைக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் தேர்வு செய்யும் லாக் இன் ப்ரீயட் மூலமாக நிச்சயம் ரூ. 31 முதல் 35 லட்சம் வரை முதலீட்டாளார்கள் பெற இயலும்.

இந்த திட்டத்தில் 19 முதல் 55 வயது வரையிலான இந்திய பிரஜைகள் தங்களை இணைத்துக் கொள்ள இயலும். குறைந்தபட்சமாக நீங்கள் ரூ. 10 ஆயிரம் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக நீங்கள் ரூ. 10 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.

இதற்கான ப்ரீமியத்தை நீங்கள் காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர இடைவெளிகளில் செலுத்திக் கொள்ள முடியும். 30 நாட்கள் க்ரேஸ் பீரியட் பெற்றுக் கொண்டும் நீங்கள் ப்ரீமியம் தொகையை செலுத்திக் கொள்ள இயலும். மேலும் இந்த முதலீட்டை அடிப்படையாக கொண்டு முன்பணமும் பெற்றுக் கொள்ள முடியும்.

சரி தற்போது ரூ. 1500-ஐ முதலீடாக செலுத்தி எப்படி ரூ. 35 லட்சத்தை பெற இயலும் என்பதை தற்போது பார்ப்போம்.

19 வயதில் ஒருவர் இந்த முதலீட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சத்திற்கான திட்டத்தை வாங்கினால் அஸ்யூர்ட் சம்மாக ரூ. 10 லட்சம் கிடைக்கும். 55 ஆண்டுகளுக்கு இதில் முதலீடு செய்தால் ரூ. 31.60 லட்சம் ரிட்டர்ன்ஸ் கிடைக்கும். அதே போன்று ஒருவர் 60 ஆண்டுகள் முதலீடு செய்தால் 34.60 லட்சம் ரிட்டர்ன்ஸ் கிடைக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Post Office Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment