/tamil-ie/media/media_files/uploads/2021/12/Money-10.jpg)
Post Office Scheme Invest Rs 1500 : கிராம் சுரக்ஷா என்ற திட்டத்தை இந்திய அஞ்சல் அலுவலகம் முதலீட்டாளர்களுக்கு வழங்கி வருகிறது. நம்மில் பெரும்பாலான மக்கள் தங்களின் வருவாயை மிகவும் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய விரும்புவோம். பங்கு சந்தை , ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தில் முதலீடு போன்றவை நாம் எத்தகைய ரிட்டர்ன்ஸை பெறுவோம் என்ற சந்தேகத்தை முன்வைப்பதோடு அதிகப்படியான அபாயங்களையும் கொண்டுள்ளது. எனவே தான் பலரும் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களை தேர்வு செய்கின்றனர்.
இன்று நாம் காண இருக்கும் இந்த தபால் நிலைய சேமிப்பு திட்டத்தில் ஒருவர் மாதத்திற்கு ரூ. 1500 முதலீடு செய்தால் ரிட்டர்ன்ஸாக ரூ. 35 லட்சம் வரை பெற இயலும். இந்த கணக்கை துவங்க உங்களின் வயது 19 முதல் 55-க்குள் இருக்க வேண்டும்.
உங்களின் வயது தற்போது 19 என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அடுத்த 55 ஆண்டுகளுக்கு ரூ. 1515-ஐ முதலீடாக தபால் நிலையத்தில் இந்த திட்டத்தின் கீழ் சேமித்தால் ரூ. 31.60-ஐ மெச்சூரிட்டி பலனாக திரும்ப பெற இயலும்.
ரூ. 1463-ஐ 58 ஆண்டுகளுக்கு சேமித்தால் 58 ஆண்டுகள் முடிவில் ரூ. 33.40 லட்சத்தை ரிட்டர்ன்ஸாக பெற இயலும்.
60 ஆண்டுகள் ஒரு நபர் ரூ. 1411-ஐ சேமித்தால் சேமிப்பு காலத்தின் முடிவில் ரூ. 34.60 லட்சத்தை ரிட்டர்ன்ஸாக பெற இயலும். இந்த திட்டத்தின் குறைந்த பட்ச பலனே ரூ. 10 ஆயிரத்தில் இருந்து 10 லட்சம் வரைக்கும் இருக்கும்.
இதற்கிடையில் கணக்கு வைத்திருக்கும் நபர் இறந்துவிட்டால் அவருடைய வாரிசுக்கு இந்த பணம் கொடுக்கப்படும்.
ஒரு ஆண்டுக்கான ப்ரீமியம் தொகையை முழுமையாக கட்ட விரும்பும் நபர்கள் 12 மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறையோ செலுத்தலாம். அவசர காலங்களில் ஒருவரால் ப்ரீமியம் கட்ட இயலாமல் போனால் அவருக்கு 30 நாட்கள் க்ரேஸ் ப்ரீயட் வழங்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் தன்னுடைய திட்டத்தை ரத்து செய்கிறார் என்ற பட்சத்தில் அவருக்கு இந்த திட்டத்தின் பலன்கள் கிடைக்காது என்பதால் அப்படி செய்ய வேண்டாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.