Post Office Scheme : பாதுகாப்பு மற்றும் நல்ல வருமானம், இவை இரண்டும் தான், முதலீட்டாளர்கள் மனதில் எப்போதும் கவலையை ஏற்படுத்தும் விசயம். முதலீட்டை போட்டு வருமானம் ஏதும் கிடைக்காமல் நட்டமடையும் சூழல்கள் இப்போது அதிகமாக இருப்பதால் எங்கே, எப்போது, எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்ற விசயங்களை மிகவும் யோசித்து முடிவுகளை மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு நீங்களும் யோசிக்கின்றீர்கள் என்றால், உங்களுக்கான சரியான திட்டமாக தபால் நிலையங்களில் வழங்கப்படும் தேசிய சேமிப்பு சான்று National Saving Certificate (NSC) திட்டம் இருக்கும். பல்வேறு முன்னணி வங்கிகள் வழங்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டிற்கான வட்டிகளைக் காட்டிலும் கூடுதல் வட்டியை வழங்குகிறது இந்த திட்டம். என்எஸ்சியில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் ஆண்டுதோறும் வட்டியைச் சேர்க்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆனால் அதே நேரத்தில் முதிர்ச்சியிலும் உங்களுக்கு பணம் வழங்கப்படும்.
NSC திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். நீங்கள் விரும்பினால், முதிர்வுக்குப் பிறகு மேலும் 5 ஆண்டுகளுக்கு உங்கள் முதலீட்டை அதிகரிக்கலாம். நீங்கள் NSC யில் குறைந்தது ரூ .100 முதலீடு செய்ய வேண்டும். இது குறைந்தபட்ச முதலீடு ஆகும். அதிகபட்ச வரம்பு என்று எதுவும் இல்லை.
வருமான வரிச் சட்டம், 1961 ன் பிரிவு 80C இன் கீழ், NSC முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் முதலீடுகளுக்கு வரி விலக்கு பெறுகிறார்கள். ரூ 100, ரூ 500, ரூ 1000, ரூ 5000 மற்றும் ரூ 10,000 மதிப்புள்ள என்எஸ்சியை நீங்கள் பெற முடியும். நீங்கள் விரும்பும் பல சான்றிதழ்களை வெவ்வேறு விலையில் வாங்குவதன் மூலம் NSC இல் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு முதலீட்டாளர் ரூ. 15 லட்சம் முதலீடு செய்கிறார் என்றால், 5 வருடத்தில் ரூ. 20.85 லட்சமாக தன்னுடைய பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதாவது ஐந்து வருடத்தில் ரூ. 6 லட்சம் வரை இந்த திட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறார் என்று அர்த்தமாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil