Post office scheme : உங்கள் கையில் இருக்கும் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்குவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா அல்லது மிகவும் பாதுகாப்பான வகையில் எங்கே முதலீடு செய்யாலாம் என்ற யோசனை உங்களுக்கு இருக்கிறதா? இந்தியா போஸ்ட் வழங்கும் தேசிய சேமிப்பு சான்றிதழ் உங்களின் கவலையை போக்கும் மிக முக்கியமான சேமிப்பு திட்டமாக இருக்கும்.
தற்போது 6.8% வட்டியை வழங்கும் இந்த சேமிப்பு திட்டம் உங்களின் பணத்திற்கான வட்டியை வருடத்திற்கு ஒருமுறை உங்களின் கணக்கோடு இணைத்து மெச்சூரிட்டியின் போது உங்கள் கைக்கு பணம் வந்துவிடும்.
இந்த திட்டத்திற்கான மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகளாகும். உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் தாராளமாக மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை நீட்டித்துக் கொள்ளமுடியும். மிகவும் குறைந்த அளவில் கூட நீங்கள் இந்த கணக்கை துவங்க முடியும். ரூ. 100 முதலீடு செலுத்தினால் போதுமானது. உச்ச வரம்பு என்று எதுவும் இல்லை.
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ், NSC முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு ரூபாய் 1.5 லட்சம் முதலீடுகளுக்கு வரி விலக்கு பெறுகிறார்கள். நீங்கள் ரூ 100, ரூ 500, ரூ 1000, ரூ 5000 மற்றும் ரூ 10,000 மதிப்புள்ள என்எஸ்சி பெறலாம். நீங்கள் விரும்பும் பல சான்றிதழ்களை வெவ்வேறு விலையில் வாங்குவதன் மூலம் NSC-இல் நீங்கள் முதலீடு செய்ய இயலும்.
என்.எஸ்.சியில் ஒருவர் ரூ. 15 லட்சம் முதலீடு செய்கிறார் என்றால் அவருக்கு 5 ஆண்டுகள் முடிவில் 6.8% வட்டியுடன் ரூ. 20.85 லட்சம் வரை பெற இயலும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil