Advertisment

Post Office scheme; 100 ரூபாயாகவும் சேமிக்கலாம்: பெரிய தொகையை திருப்பித் தரும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்!

Post office scheme national saving certificate scheme: இந்த திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமே, இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ .100 முதல் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். எனவே குறைந்த தொகையை முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரூ. 210 முதலீட்டில் ரூ. 5000 ஓய்வூதியம் வழங்கும் சிறந்த முதலீட்டு திட்டம்; விபரங்கள் இதோ…

நமக்கான சேமிப்பு முதலீட்டு திட்டங்களில் பல நல்ல திட்டங்களை தபால் அலுவலக வழங்குகிறது. உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும் மற்றும் பிற நிறுவன முதலீட்டு திட்டங்களை விட அதிக நன்மைகளை வழங்க தபால் அலுவலகம் பல நன்மை பயக்கும் திட்டங்களை வழங்குகிறது. இந்த தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் மிகுந்த பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களாகும்.

Advertisment

தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில் மிக குறைந்த முதலீட்டு தொகையையும் அதிக லாபத்தையும் வழங்குக் கூடிய சேமிப்பு திட்டத்தை இப்போது பார்ப்போம்.

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்

தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்.எஸ்.சி) திட்டத்தை தபால் அலுவலகம் நமக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில், நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் சில ஆண்டுகளில் பெரிய பணம் சம்பாதிக்கலாம். உங்கள் பணம் தபால் நிலையத்தில் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். எனவே, உங்கள் பணத்தை எந்த ஆபத்தும் இல்லாமல் அதில் முதலீடு செய்யலாம். இதனால் உங்களது மற்றும் உங்கள் குடும்பத்தினரின் எதிர்காலத்தை பாதுகாப்பாக வைக்கலாம்.

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் நன்மைகள்

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் விருப்பப்பட்டால் முதிர்வு காலத்தை நீட்டிக்கலாம். மேலும், 5 ஆண்டுகளுக்குள் இடையில் உங்களுக்கு பணம் தேவைப்பட்டால்,  சில நிபந்தனைகளுடன் 1 வருடத்திற்குப் பிறகு உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். வட்டி விகிதங்கள் நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் (3 மாதங்களுக்கு ஒரு முறை) அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகின்றன.

முதலீட்டு தொகை எவ்வளவு?

இந்த திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமே, இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ .100 முதல் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். எனவே குறைந்த தொகையை முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது. அதே நேரம் குறைந்த முதலீட்டிற்கு அதிக லாபத்தை தரக் கூடிய முதலீட்டு திட்டம் இது. அது எப்படி என்பதைப் பார்ப்போம்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் இந்த திட்டத்தில் ரூ. 15 இலட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால், 6.8 வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ .20.85 லட்சம் கிடைக்கும். உங்களது முதலீட்டுக்கு சுமார் ரூ .6 லட்சம் வட்டி லாபமாக கிடைக்கும்.

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் வட்டி விகிதம்

இந்த முதலீட்டு திட்டத்திற்கு தற்போது ஆண்டுக்கு வட்டி விகிதம் 6.8% ஆக உள்ளது. மேலும் ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கம் அதைத் திருத்துகிறது. இது வட்டி ஆண்டுதோறும் கூட்டப்பட்டு முதிர்ச்சியின் போது உங்கள் முதலீட்டுடன் சேர்த்து கிடைக்கும். என்.எஸ்.சி மீதான வட்டி விகிதம்,  வங்கிகள் ஃபிக்ஸ்ட் டெபாசிட்களுக்கு அளிக்கும் வட்டி விகிதத்தை விட அதிகமாக உள்ளது. வங்கிகளின் வட்டி விகிதங்கள் 5 முதல் 6% வரை உள்ளது.

இந்த திட்டம் வருமான வரி பிரிவு 80 சி இன் கீழ் வருகிறது. எனவே, ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் உங்கள் முதலீட்டுக்கு வரி விலக்கு பெறலாம்.

கணக்கை முன்கூட்டியே மூடுவது

பின்வரும் நிபந்தனைகளைக் கொண்டு 5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தேசிய சேமிப்பு திட்டத்தை முன்கூட்டியே முடிக்கலாம்.

முதலீட்டு கணக்கு வைத்திருப்பவரின் மரணம், அல்லது கூட்டுக்கணக்கில் யாராவது ஒருவரின் மரணத்தின் காரணமாக கணக்கை முன்கூட்டியே மூடலாம்.

ஒரு கெஜட்டட் அதிகாரியின் உறுதிமொழியின் மூலம் பறிமுதல் செய்யப்படலாம்.

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கணக்கை மூடலாம்.

வேறு எந்த காரணங்களைக் கொண்டும் 5 வருடத்திற்கு முன்னதாக கணக்கை முடிக்க முடியாது.

ஒரு வருடம் கழித்து கணக்கு முன்கூட்டியே மூடப்பட்டிருந்தாலும், வைப்புத் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், முன்கூட்டியே மூடப்படுவது அனுமதிக்கப்படும். மேலும் அசல் தொகையின் வட்டி அவ்வப்போது தபால் அலுவலக சேமிப்புக் கணக்கிற்கு பொருந்தும் விகிதத்தில் முழு மாதங்களுக்கும் கணக்கு வைக்கப்பட்டு செலுத்தப்படும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits Savings Scheme Post Office Scheme Tax Saving Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment