Post office scheme : இந்தியாவில் பல்வேறு தரப்பட்ட மக்களின் நம்பிக்கைக்குரிய சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாக அமைந்துள்ளது தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள். நல்ல ரிட்டர்ன்ஸ் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்கள் தபால் நிலையங்களில் சேமிப்பு திட்டங்களை துவங்கியுள்ளனர்.
ஐந்து ஆண்டுகள் லாக்-இன் ப்ரீயட் கொண்டது ரிக்கரிங்க் டெபாசிட் திட்டமாகும். வங்கிகளைப் போன்றே பல்வேறு சிறப்பு சலுகைகளை இந்த ஆர்.டி. திட்டம் வழங்கினாலும் ஐந்து ஆண்டுகள் மெச்சூரிட்டி முடிவதற்கு முன்பு இந்த சேமிப்புக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க இயலாது.
இந்த திட்டத்தில் ஒருவர் வெறும் ரூ.100 கொண்டு இணையலாம். அதிகபட்ச வரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு 5.8 வருடாந்திர வட்டியை வழங்குகிறது இந்த திட்டம். இதில் வட்டி கூட்டுத்தொகை காலாண்டு அடிப்படையில் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ரூ. 15 ஆயிரத்தை நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் ஐந்து ஆண்டுகள் முடிவில் 24 லட்சத்தி 39 ஆயிரத்து 714-ஐ பெற்றுக் கொள்ள முடியும். 120 மாதங்களில் நீங்கள் முதலீடு செய்த மொத்தத் தொகை ரூ.18 லட்சமாக இருக்கும். இதில் உங்களுக்கு 6,39,714 ரூபாய் வட்டி கிடைக்கும். தபால் நிலையத்தில் இந்த ஆர்.டி. கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க விரும்பினால் ஃபார்ம் -4ஐ சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆர்.டி. கணக்கை மூடுவது எப்படி?
நீங்கள் ஒரு சில காரணங்களால் ஆர்.டியை மூட வேண்டும் என்று விரும்பினால் மூன்று ஆண்டுகள் கழித்து தான் கணக்கை முடிக்க முடியும். மூன்று நபர்களுடன் கூட்டாக ஆர்.டி. கணக்கை நீங்கள் துவங்க இயலும். மேலும் நீங்கள் டெபாசிட் செய்துள்ள பணத்தின் 50%-ஐ கடனாக பெற இயலும். ஆனால் ஆர்.டி. சேமிப்பிற்கு வழங்கப்படும் வட்டியைக் காட்டிலும் 2% கூடுதலாக வட்டி வசூலிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil