Advertisment

Post Office Savings: அதிவேகமாக உங்க பணத்தை டபுள் ஆக்கும் டாப் திட்டங்கள் எவை?

ஏராளமான போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் வங்கிகளின் Fixed deposit ஐ விட அதிக பலன் தருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Post Office Savings: அதிவேகமாக உங்க பணத்தை டபுள் ஆக்கும் டாப் திட்டங்கள் எவை?

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு மிக அவசியமான ஒன்றாக உள்ளது. திரும்பிய பக்கம் எல்லாம் சேமிப்பு திட்டங்கள் இருப்பதால், அவற்றில் பாதுகாப்பானதை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். அதற்கு சிறந்த ஆப்ஷன் தபால் அலுவலக சேமிப்பு தான்.

Advertisment

ஏராளமான போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் வங்கிகளின் Fixed deposit ஐ விட அதிக பலன் தருகிறது. முதலீட்டோடு சிறந்த வருமானமும் கிடைக்கிறது. தபால் நிலையங்களில் செயல்பட்டு வரும் சேமிப்பு திட்டங்கள் சிலவற்றை காணலாம்..

  1. போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்டில் 1 முதல் 3 ஆண்டு வரையிலான திட்டத்திற்கு 5.5% வரை வட்டி கிடைக்கின்றது. இது மிக பாதுகாப்பான ஒரு முதலீடாகவும் சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இதில் முதலீடு செய்தால் 13 ஆண்டுகளில் உங்களின் பணம் இரட்டிப்பாகும். அதே சமயம், 5 ஆண்டு திட்டத்தில் இணைந்தால் உங்களுக்கு 6.7% வரை வட்டி கிடைக்கிறது. இதில், உங்களது பணம் 10 ஆண்டுகளில் உங்களது பணம் இரட்டிப்பாகிறது.

2. போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்

இந்த திட்டத்தில் உங்களது பணம் இரட்டிப்பாக நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். ஏனென்றால், இதன் வட்டி தொகை 4 விழுக்காடு மட்டுமே. குறைந்தப்பட்சம் உங்கள் பணம் இரட்டிப்பாக 18 ஆண்டுகள் ஆகும்.

  1. போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட்

தபால் நிலையத்தில் நீங்கள் தொடங்கும் ரெக்கரிங் டெபாசிட் கணக்குக்கான கால வரம்பு 5 ஆண்டுகள் ஆகும். இதை விட குறைவாக திறக்க முடியாது. . தற்போது ரெக்கரிங் டெபாசிட் சேமிப்புத் திட்டத்தில் 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதில், உங்களது பணம் 12 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

  1. மாதாந்திர வருமான திட்டம்

மாதந்தோறும் வருமானம் தரும் இந்த தபால் அலுவலக சேமிப்புத் திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1,500 மற்றும் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். இணைப்புக் கணக்கில் ரூ.9 லட்சம் வரையில் சேமிக்கலாம். இத்திட்டத்துக்கான வட்டி 6.6 சதவீதம். இத்திட்டத்தின் உங்களது பணம் 11 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

5. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்

60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்துக்கான தற்போதைய வட்டி 7.4 சதவீதம் ஆகும். இதில், உங்களது பணம் ஒன்பதரை ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

6. பிபிஎஃப்

நடப்பு காலாண்டில் பிபிஎஃப் 7.10 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்தக் கணக்கு 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. இந்த திட்டத்தில், உங்களது பணம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

  1. சுகன்யா சம்ரிதி யோஜனா

10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் இந்த கணக்கினை தொடங்க முடியும். இத்திட்டத்தின் வட்டி 7.6 விழுக்காடு ஆகும். இதில், உங்களது பணம் 9 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

  1. தேசிய சேமிப்பு பத்திரம்

அனைத்து இந்திய குடிமக்களும் இத்திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுள்ளவர். குறைந்தபட்ச முதலீடு ரூ.100, அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. இத்திட்டத்தில் ஆண்டுக்கு 6.8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில், உங்களது பணம் பத்தரை ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானவை என்பதுடன் வருமான வரி விலக்கும் பெற முடிவது கூடுதல் சிறப்பாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Post Office Scheme Savings Scheme Post Office Post Office Savings Scheme National Savings Certificate Savings Account
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment