தபால் துறை வழங்கும் சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி, நீண்ட கால சிறந்த முதலீட்டு ஆகும். ஃபிக்சட் டெபாசிட்டை விட அதிக வட்டி கிடைப்பதுடன், பல்வேறு சலுகைகளும் கிடைக்கின்றன. இபிஎப் கணக்கு இல்லாதவர்களுக்கு, PPF நீண்ட கால ஓய்வூதிய திட்டத்தில் சிறந்தவை ஆகும்.
பிபிஎப் முதிர்வு காலம் விதிமுறைகள்
பிபிஎப் கணக்கு தொடங்கி 15 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும். தேவைப்படுவோர், முதிர்ச்சி காலத்தில் இருந்து 5 ஆண்டுகள் கூடுதலாக நீட்டித்துக்கொள்ளலாம்.
பிபிஎப் கணக்கு தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் கணக்கை மூடிவது சரியான முடிவு கிடையாது. பிபிஎப் கணக்கு தொடங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவ செலவு, படிப்பு செலவுக்காக கணக்கை மூட அனுமதியளிக்கப்படும்.
ஏழாம் ஆண்டிற்கு பிறகு, ஒரு முறை மட்டும் பணத்தை எடுக்க அனுமதி உண்டு. இருப்பினும், அப்போது நான்காவது ஆண்டின் இறுதியில் அல்லது அதற்கு முந்தைய ஆண்டு எது குறைவாக இருந்தாலும், அதிகபட்சத் தொகையில் 50 சதவீதத்தை மட்டுமே திரும்பப் பெறலாம்.
வட்டி விகிதங்கள், வரி விலக்கு
இந்த பிபிஎப் திட்டத்தில் 7.1 சதவீதம் வட்டி கிடைக்கிறது. ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியில் வட்டி டெபாசிட் செய்யப்படும். பிபிஎப் கணக்கில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணம் டெபாசிட் செய்யலாம். ஆனால், ஒரு நிதியாண்டிற்கு குறைந்தப்பட்ச தொகையாக 500 ரூபாயும், அதிகப்பட்ச தொகையாக ஒன்றரை லட்சம் இருக்க வேண்டும். மினிமம் பேலன்ஸ் 500 ரூபாயை செலுத்த தவறினால், கணக்கு மூடப்படும்.
நீங்கள் உங்களது விருப்பப்படி பணத்தை மொத்தமாகவோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகவோ செலுத்தலாம். டெபாசிட்கள் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வருவதால், வரி விலக்கு கிடைக்கிறது. இது லாபகரமான முதலீடாக இருக்கும்.
ஆன்லைன் பரிவர்த்தனை
அஞ்சலக கணக்கு வைத்திருப்பவர்கள், இந்திய போஸ்ட் பேமென்ட் வங்கி (IPPB) மூலம் அடிப்படை வங்கி பரிவர்த்தனைகளை ஆன்லைனில் எளிதாக மேற்கொள்ளலாம். முன்னதாக, இதற்கு தபால் அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும்.
IPPB மூலம் உங்கள் அஞ்சல் அலுவலக PPF இல் பணத்தை மாற்றும் முறை
- முதலில் வங்கிக் கணக்கிலிருந்து IPPB கணக்கில் பணத்தைச் செலுத்த வேண்டும்.
- அடுத்து, dop சர்வீஸ் செல்ல வேண்டும்
- அதில், தொடர் வைப்புத்தொகை, பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி கணக்கு, லோன் போன்ற ஆப்ஷன்கள் தோன்றும்.
- நீங்கள் பிபிஎப் கணக்கில் டெபாசிட்ட செய்ய விரும்பினால், Provident Fund தேர்ந்தெடுக்க வேண்டும்.
- தொடர்ந்து, உங்களது பிபிஎப் கணக்கு நம்பர் மற்றும் dop கஸ்டமர் ஐடி பதிவிட வேண்டும்.
- அடுத்த திரையில் பணத்தை டைப் செய்துவிட்டு, PAY என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- ஐபிபிபி செயலி வழியாக நடைபெற்ற பணப்பரிமாற்றம் சக்சஸ் ஆனதும், உங்களுக்கு மெசேஜ் வரும்.
ஐபிபிஐ கணக்கு வழியாக, தபால் துறையின் பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான டெபாசிட் பணத்தை செலுத்தலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil