மாதம் ரூ. 4950 வருமானம்: போஸ்ட் ஆபீஸில் இந்த அக்கவுண்ட் தொடங்குவது எப்படி?

உங்களின் இருப்பிட சான்றுகளின் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் மற்றும் உங்களிடன் அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றை பாரத்துடன் சமர்பிக்க வேண்டும்.

Post Office Schemes How To Open Monthly Income Scheme Account 295078

Post Office Schemes : நம்முடைய சம்பாத்தியம் நம்முடைய இன்றைய தேவைக்கு மட்டும் இல்லாமல் நாளைய பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். வங்கிகள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை தருவது போலவே தபால் நிலையங்களிலும் நிறைய சேமிப்பு திட்டங்கள் உள்ளன. ஒருவர் அதிகப்படியாக தன்னுடைய கணக்கில் ரூ. 4.5 லட்சம் வரை சேமிக்கலாம். அதே போன்று கூட்டு கணக்கில் 9 லட்சம் வரை சேமிக்கலாம்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டத்தில் சேமிக்கப்படும் பணத்திற்கு 6.6% வட்டி தருகிறது. நீங்கள் உங்களின் தபால் கணக்கில் மாதாந்திர வருமான திட்டத்தில் (Post Office Monthly Income Scheme (MIS)) ரூ. 4.5 லட்சம் முதலீடு செலுத்தியிருந்தால் ஒரு வருடத்தில் உங்களுக்கு ரூ. 29,700 வரை வட்டி கிடைத்திருக்கும். அதே போன்று கூட்டு சேமிப்பில் நீங்கள் ரூ. 9 லட்சம் செலுத்தியிருந்தால் உங்களுக்கு வருடாந்திர வட்டி 59,400 கிடைத்திருந்திருக்கும். அதாவது நீங்கள் மாதத்திற்கு ரூ. 4950-ஐ வருமானமாக பெற்றிருக்கலாம்.

நீங்கள் கணக்கு துவங்கிய நாளில் இருந்து ஒரு மாதத்திற்குள் நீங்கள் உங்களின் வட்டியை பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் அப்படி அந்த வட்டியை பெறாவிட்டால் அதற்காக கூடுதல் வட்டி ஏதும் கிடைக்காது. அது தவிர கூடுதலாக நீங்கள் பணம் முதலீடு செய்தாலும் அதற்கு வட்டி கிடையாது. தனியாக ஒருவர் இந்த கணக்கை துவங்க முடியும். அல்லது மூன்று பேர் இணைந்து கூட்டு கணக்கினை துவங்கலாம். 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெயரில் துவங்கப்படும் கணக்கிற்கு கார்டியன் தேவை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

இந்த கணக்கை துவங்குவது எப்படி?

நீங்கள் ஏற்கனவே தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைக்கவில்லை என்றால் புதிதாக ஒன்றை துவங்க வேண்டும்.

ஏற்கனவே சேமிப்பு கணக்கை வைத்திருந்தால் மாதாந்திர வருமான சேமிப்பு கணக்கு துவங்குவதற்கான பாரத்தை வாங்கி அதில் உங்களின் தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

உங்களின் இருப்பிட சான்றுகளின் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் மற்றும் உங்களிடன் அடையாள அட்டையின் நகல் ஆகியவற்றை பாரத்துடன் சமர்பிக்க வேண்டும்.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Post office schemes how to open monthly income scheme account

Next Story
நடமாடும் நகைக்கடைகள் ஜாக்கிரதை: வீட்டில் இவ்வளவு கிராமுக்கு மேல் நகை இருந்தால் ஐ.டி விசாரிக்கலாம்!Business news in tamil: How much gold can you keep at home as per income tax rules? In tamil.
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com