Post office schemes that will double your money without risks: பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா போன்ற இக்கட்டான சூழல்கள் வருகின்ற நிலையில் நம்முடைய சேமிப்பு பணம் எவ்வளவு உதவிகரமாக இருந்தது என்பதை நாம் இந்த இரண்டு வருடங்களில் நன்றாக உணர்ந்திருப்போம். சிறப்பான லாபத்தை வழங்கும் சேமிப்பு திட்டங்களுக்கு வங்கிகள் மற்றும் பங்கு சந்தைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் வீட்டின் அருகிலேயே இருக்கும் தபால் நிலையங்கள் உங்களுக்கு மிக உதவிகரமாக இருக்கும். இந்த 9 சேமிப்பு திட்டங்கள் உங்களின் சேமிப்பை பாதுகாப்பதோடு ரிட்டன்ஸையும் அதிகரிக்கிறது.
Post Office Time Deposit
ஒரு ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கான சேமிப்பு திட்டமாகும். இதில் நீங்கள் உங்கள் பணத்தை சேமிக்க துவங்கினால் 5.5% வரை வட்டி பெற முடியும். இந்த திட்டத்தில் நீங்கள் 13 ஆண்டுகள் முதலீடு செய்தால் உங்களின் முதலீடு இரட்டிப்பாக மாறிவிடும் என்பதற்கு தபால் நிலையங்கள் கேரண்டி அளிக்கின்றன. அதே போன்று 5 ஆண்டு திட்டங்களை தேர்வு செய்தால் உங்களுக்கு 6.7% வரை வட்டி கிடைக்கும்.
Post Office Savings Bank Account
நீங்கள் சேமிப்பு கணக்கு திட்டம் மூலம் சேமிக்க துவங்கினால் உங்களுக்கு கிடைக்கும் வட்டியானது 4.0% ஆக இருக்கும். உங்களின் முதலீடு இரட்டிப்பு அடைய நீங்கள் 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
ரெக்யூரிங் டெபாசிட் (Recurring Deposit)
தற்போது தபால் நிலையங்களில் வழங்கப்படும் RD திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு வட்டி 5.8% கிடைக்கும். இந்த வட்டியை நீங்கள் கணக்கில் கொண்டால் 12.41 வருடங்களில் உங்களின் முதலீட்டை இரட்டிப்பாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
Post Office Monthly Income Scheme
தபால் நிலையம் மாதாந்திர சேமிப்பு திட்டம் மூலம் நீங்கள் முதலீடு செய்தால் நீங்கள் ஆண்டுக்கு 6.6% வட்டியை பெற முடியும். மேலும் 10.91 ஆண்டுகளில் உங்களின் முதலீட்டை இரட்டிப்படைய செய்யலாம்.
Post Office Senior Citizens Savings Scheme
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் இதுவாகும். தற்போது இந்த திட்டத்தில் 7.4% வட்டியை வழங்குகிறது இந்த திட்டம். உங்களின் பணம் 9 ஆண்டுகளில் இரட்டிப்படையும் வாய்ப்பினை இந்த சேமிப்பு திட்டம் வழங்குகிறது.
Post Office PPF
தபால் நிலைய ப்ரோவிடண்ட் ஃபண்ட் திட்டம். இந்த திட்டத்தில் உங்களுக்கு 7.1% வரை வட்டி கிடைக்கிறது. 10.41 ஆண்டுகளில் உங்களின் சேமிப்பு இரட்டிப்பு மடங்காக அதிகரிக்கும். இந்த பி.பி.எஃப். திட்டத்தின் லாக்-இன் காலம் 15 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகன்யா சம்ரிதி திட்டம் (Post Office Sukanya Samriddhi Account)
இந்த திட்டம் பெண் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்டது என்றால் மிகையல்ல. ஆண்டுக்கு உங்களின் சேமிப்பு தொகையில் 7.6% வட்டி கிடைக்கிறது. இந்த திட்டங்களில் உங்களின் பெண் குழந்தைகளின் வருங்கால தேவைகளை கருத்தில் கொண்டு முதலீடு செய்யும் பட்சத்தில் 9.47 ஆண்டுகளில் இரட்டிப்பு மடங்கு பணத்தை திரும்பப் பெற இயலும்.
தபால் நிலைய தேசிய சேமிப்பு சான்றிதழ்
இது ஒரு ஐந்தாண்டு திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் 6.8% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேமிப்பு திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யும் போது உங்களின் முதலீடு 10.59 ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.