/tamil-ie/media/media_files/uploads/2020/10/Post-Office-Saving-Scheme-Post-Office-Selva-Magal-Thittam.jpg)
கடந்த பல ஆண்டுகளாக அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்குகள் மக்களின் நம்பகத்தன்மையை பெற்றுள்ளன. பாதுகாப்பான சேமிப்பு கருவியாக மட்டுமல்லாமல், நல்ல வருவாய் வழங்கக்கூடிய அம்சங்கள் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்குத் திட்டங்களுக்கு உண்டு. இதனால் இத்திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளில் அதீதமாக பிரபலமடைந்துள்ளன.
தந்தையின் மறைவு , தியேட்டர் வாசலில் வேலை: திரும்பி பார்க்க வைத்த பிக் பாஸ் ரம்யா பாண்டியன்!
ஐந்து ஆண்டு வரையிலான கால வைப்பு நிதிக்கு 6.7% வட்டி வருமானம் கிடைக்குறது. இதுமட்டுமல்லாமல், ஐந்து ஆண்டு வரையிலான கால வைப்பு நிதிக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி-க்கு கீழ் வருமான வரி சலுகைகளும் வழங்கப்படுகிறது.
1. இத்திட்டத்தில் முதலீடு ஏப்ரல் மாதம் முதல் வருடத்திற்குக் குறைந்தபட்சம் 7.4 சதவீதம் வரை லாபம் பெறலாம். தொடர் வைப்பு நிதி திட்டமான இதில் குறைந்தது மாதம் 10 ரூபாய் முதல் முதலீடு செய்துவரலாம். மாதம் 10 ரூபாய் விதம் ஐந்து வருடம் வரை முதலீடு செய்துவரும் 600 ரூபாய்க்கு முதிர்ச்சித் தொகையாக 726.97 ரூபாய் பெறலாம்.
2. தபால் அலுவலக நேர வைப்பு கணக்கில் குறைந்தது 200 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வட்டி காலாண்டு வாரியாக கணக்கிடப்பட்டு ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும்.
ஒரு வருடம் முதலீடு செய்பவர்களுக்கு 7.1 சதவீத லாபமும், 2 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.2 சதவீதம் வரை லாபமும், 3 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.4 சதவீதம் வரை லாபமும், 5 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.9 சதவீதம் வரை வட்டியும் லாபமாகப் பெறலாம்.
3. தபால் அலுவலகத்தின் மாத வருமான திட்ட கணக்கின் மூலம் முதலீடு செய்யும் போது மாதந்தோறும் செலுத்தி வரும் தொகைக்கு 7.80 சதவீதம் வரை லாபம் பெறலாம்.
4. தபால் அலுவலகத்தில் உள்ள அனைத்து சேமிப்பு கணக்கையும் ஒப்பிடுகையில் இதுவே அதிக லாபம் அளிக்கக் கூடிய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மாதத்திற்குக் குறைந்தது பட்சம் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். வருடத்திற்கு அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரையிலும் முதலீடு செய்யலாம்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால் முதிர்ச்சி காலம் முன்பே திரும்பிப் பெறும் வசதி கிடையாது. இத்திட்டம் மூலம் பெறும் லாபத்திற்கு வரி ஏதும் கிடையாது. அதுமட்டும் இல்லாமல் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வரும் போது கடன் பெறும் வசதியும் உண்டு.
கொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்
5. இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் போது 8.6 சதவீதம் வரை வட்டி விகிதம் பெறலாம். அதுமட்டும் இல்லாமல் இத்திட்டத்திற்கும் வருமான வரியில் இருந்து வரி விலக்கைப் பெறலாம்
செல்வ மகள் திட்டம்
மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இத்திட்டம் தமிழ்நாட்டில் செல்வ மகள் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.