குறைந்த ரிஸ்க்கில் அதிகமான லாபம் தரும் ஒரு முதலீட்டு திட்டம் குறித்து நீங்கள் வெகுநாளாக யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்கான சரியான திட்டம் இது தான். தபால் நிலையங்கள் உங்களுக்கு குறைவான ரிஸ்க்கில் அதிக ரிட்டர்ன்ஸை வழங்கும் பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறது. தற்போது நீங்கள் பார்க்க இருக்கும் இந்த திட்டமும் இந்த பலன்களுக்கு விதி விலக்கானது அல்ல.
Post Office Gram Suraksha Yojana
கிராம சுரக்ஷா யோஜனா என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் சிறந்த ரிட்டர்ன்ஸை பெற முடியும். உங்களுக்கு 80 வயது ஆகும் போது, உங்களின் சேமிப்புக்கான ரிட்டர்ன்ஸ் மற்றும் போனஸ் உங்களின் அதிகாரப்பூர்வ வாரிசு அல்லது நீங்கள் நாமினி செய்த நபர்களுக்கு சென்றுவிடும்.
Post Office Gram Suraksha Yojana - இந்த திட்டத்தில் சேமிக்க தேவையான தகுதிகள் என்ன?
19 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்த இந்தியரும் இந்த கணக்கை துவங்க இயலும். குறைந்தபட்சமாக ரூ. 10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை இதில் நீங்கள் முதலீடு செய்யலாம். இதற்கான ப்ரீமியத்தை நீங்கள் மாதாந்திர முறையில் செலுத்தலாம். காலாண்டு மற்றும் அரையாண்டு அல்லது வருடாந்திர முறையிலும் உங்களால் செலுத்த இயலும். ஒரு வேளை உங்களால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பணம் செலுத்த இயலவில்லை என்றால் மீதம் இருக்கும் நிலுவை தொகையை கட்டி பாலிசியை புதுப்பித்துக் கொள்ள இயலும்.
நான்கு வருடங்கள் நீங்கள் முறையாக பணம் செலுத்தி வந்தால் உங்களுக்கு கடன்களை வழங்கவும் தபால் நிலையங்கள் முன் வரும். மூன்று வருடத்திற்குள் நீங்கள் உங்களின் பாலிசியை முடித்துக் கொள்ளவும் முடியும். ஆனால் அதில் உங்களுக்கு எந்த லாபமும் இல்லை.
ஒருவர் தன்னுடைய 19 வயதில் 10 லட்சத்திற்கு கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தை வாங்குகிறார் என்றால், மாதாந்திர ப்ரீமியம் ரூ. 1,515 (55 வருடத்திற்கு)ஆக இருக்கும். 58 ஆண்டுகளுக்கு ரூ .1,463 மற்றும் 60 ஆண்டுகளுக்கு ரூ .1,411 என்று இருக்கும். பாலிசி வாங்குபவர் 55 ஆண்டுகளுக்கு 31.60 லட்சம், 58 ஆண்டுகளுக்கு 33.40 லட்சம் மெச்சூரிட்டி பலன் பெறுவார். 60 ஆண்டுகளுக்கான மெச்சூரிட்டி பலன் ரூ .34.60 லட்சமாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil