scorecardresearch

போஸ்ட் ஆபீஸில் வட்டி கிடைப்பதில் சிக்கல்… ஏப்ரல் 1-க்குள் இதை செய்ய வேண்டும்

Post Office-ல் வட்டி பெறுவதற்கான முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-க்குள் இதை செய்யாவிட்டால் வட்டி தொகை கிடைக்காது.

போஸ்ட் ஆபீஸில் வட்டி கிடைப்பதில் சிக்கல்… ஏப்ரல் 1-க்குள் இதை செய்ய வேண்டும்

போஸ்ட் ஆபீஸில் சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம், தபால் அலுவலக டெபாசிட் திட்டம், மாத வருமானத் திட்டம் ஆகியவற்றுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வட்டி தொகை பணமாக வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களில் வட்டி தொகையை பெற, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கு, தபால் அலுவலக வங்கி கணக்கை, அத்துடன் சேர்த்தாக வேண்டும்.

அதன் மூலம், வட்டி தொகை நேரடியாக உங்கள் வங்கியில் செலுத்தப்படும்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட தபால் துறை, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம் மற்றும் டெபாசிட் கணக்குகளில் செலுத்த வேண்டிய வட்டி தொகை செலுத்தப்படாமல் அலுவலகக் கணக்கில் உள்ளது. இதை பார்க்கையில், டெபாசிட் கணக்குகளுக்கு வட்டி செலுத்தப்படுவதே பல கணக்குதாரர்களுக்கு தெரியவில்லை.

எனவே, வட்டித் தொகையை எளிதாக செலுத்தவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், மோசடிகள் மற்றும் கறுப்புப் பணச் சலவையை தடுக்கும் வகையில் சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம், மாத வருமான திட்டம், போஸ்ட் ஆபீஸ் டெபாசிட் ஆகிய கணக்குகளை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, மேலே கூறியுள்ள திட்டங்களில் பெறாத வட்டி தொகைக்கு எவ்வித வட்டியும் செலுத்தப்படாது. அதுவே, வங்கி கணக்கை இணைந்திருந்தால், அதில் டெபாசிட் ஆகும் வட்டி தொகைக்கு பிற்காலத்தில் கூடுதல் வட்டியும் கிடைக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Post office stopped interest pay in cash

Best of Express