இந்திய அரசு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பலனளிக்கும் பல்வேறு அஞ்சல் அலுவலக திட்டங்களை வழங்குகிறது. அஞ்சல் அலுவலகத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி விகிதம் மட்டுமில்லாமல், வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.
அந்த வகையில், அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு சிறந்த திட்டம் தான் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் ஆகும். போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் ரிஸ்க் குறைவான முதலீட்டு திட்டம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போல அல்லாமல் இந்த திட்டம் பாதுகாப்பான வருமானத்தை வழங்குகிறது.
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் 7.50 சதவீத வட்டி விகிதம் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு வெவ்வேறு முதிர்வு காலங்கள் உள்ளது. நீங்கள் உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்திற்கு பிரிவு 80சி-யின் கீழ் ரூ.1.50 லட்சம் வரையிலான வரிச் சலுகைகள் வழங்கப்படுகிறது.
இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த டைம் டெபாசிட் திட்டத்தில் குறைந்த பட்சம் 1,000 ரூபாய் முதல் கணக்கு தொடங்கலாம். இதில் அதிகபட்ச வரம்பு இல்லை. நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும்.
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், முதலீட்டாளர்கள் முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். பிக்சட் டெபாசிட்களைப் போலவே ஒரு முறை தான் முதலீடு செய்ய முடியும். அதன் பிறகு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வருமானம் வழங்கப்படும். 5 வருட முதிர்வுக் காலம் முடிந்ததும் வட்டி மற்றும் அசல் ஆகியவற்றை சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.
இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், 4 வகைகள் உள்ளன.
அதாவது, 1 வருட டைம் டெபாசிட் முதலீட்டுக்கு 6.9 % வட்டி வழங்கப்படுகிறது. 2 வருட டைம் டெபாசிட் முதலீட்டுக்கு 7.0 % வட்டி வழங்கப்படுகிறது.3 வருட டைம் டெபாசிட் முதலீட்டுக்கு 7.1 % வட்டி வழங்கப்படுகிறது. 5 வருட டைம் டெபாசிட் முதலீட்டில் அதிகபட்சமாக 7.5 % வட்டி வழங்கப்படுகிறது.
7.50 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் மொத்த முதலீட்டு காலத்திற்கும் வட்டி வருமானமாக 44,995 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை 1,44,995 ரூபாயாக இருக்கும்.
இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில், 18 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கணக்கைத் தொடக்கலாம். இளம் முதலீட்டாளர்களுக்கு TD (டி.டி) சிறந்த தேர்வாக இருக்கும். மேலும், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் சார்பாக தங்கள் குழந்தைகளின் பெயரிலும் கணக்குகளைத் தொடங்கலாம்.
நீங்கள் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் விண்ணப்பிக்க முடிவு செய்துவிட்டீர்கள் என்றால், அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்-க்கு சென்று படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து, நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையையும் சேர்த்து கொடுங்கள், உங்கள் கணக்கு தொடங்கப்பட்டுவிடும் அவ்வளவுதான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.