post ofice tamil post office savings scheme : முதலீடு செய்ய விரும்புவோருக்கு தேசிய சேமிப்பு சான்றிதழ் ஒரு அற்புதமான திட்டம் தேசிய சேமிப்பு சான்றிதழ்.
குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை. 10 வயதுக்கு மேலான மைனர் பெயரில் தனியாகவோ, பெற்றோருடன் கூட்டாகவோ முதலீடு செய்யலாம். மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களின் பெயரில் கார்டியன் முதலீடு செய்யலாம்.ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் மூதலீடு செய்ய தேசிய சேமிப்பு சான்றிதழ் ஒரு அற்புத திட்டம்.
தேசிய சேமிப்பு சான்றிதழில் தபால் அலுவலகம் மூலமாக மட்டுமே முதலீடு செய்ய முடியும். இந்த முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கும். மெச்சூரிட்டி காலத்திற்குள் உங்களது தேசிய சேமிப்பு சான்றிதழை வேறு ஒருவரது பெயருக்கு மாற்ற முடியும்.
ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய விரும்புவோருக்கு ஈக்விட்டி, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் என பல திட்டங்கள் இருக்கின்றன.
இதன் மெச்சூரிட்டி காலம் ஐந்து ஆண்டுகள். தற்போதைய நிலவரப்படி தேசிய சேமிப்பு சான்றிதழுக்கு ஆண்டுக்கு 6.8 விழுக்காடு வட்டி கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டுக்கும் வட்டி கணக்கிடப்பட்டு மெச்சூரிட்டி முடிவில் பணம் செலுத்தப்படும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”