வருமான வரிவிலக்கை பெற இந்த திட்டங்களில் முதலீடு செய்யுங்கள் – மகிழ்ச்சியாக வாழுங்கள்

Postal office savings scheme : இந்திய தபால் துறையில் ஒன்பது வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் சிலவற்றில் முதலீடு செய்யும் போது வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

Post,office,schemes,post,savings,tax ememption
Post,office,schemes,post,savings,tax ememption, வரி,திட்டம், தபால் துறை,வரிவிலக்கு, சேமிப்பு திட்டங்கள், வட்டிவிகிதம்

இந்திய தபால் துறையில் ஒன்பது வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் சிலவற்றில் முதலீடு செய்யும் போது வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும் இந்திய தபால் துறையில் உள்ள நேர வைப்புக் கணக்கு, பொது வைப்பு நிதி கணக்கு, மூத்த முடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் தேசிய சேமிப்பு ஆவணங்கள் ஆகிய திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வரிவிலக்கைபெறலாம். இந்திய தபால் துறையின் திட்டங்கள் மூலம் ஒரு ஆண்டில்இ ரூ.1.5 லட்சம் வரை வரியில் இருந்து வரிவிலக்கு பெற முடியும்.

நேர வைப்புக் கணக்கு: இந்திய தபால் துறையின் திட்டங்களில் ஒன்றான நேர வைப்புக் கணக்கில் நிரந்தர டெபாசிட்டின் ஒரு வருடம், இரண்டு வருட மெச்சூரிட்டி காலங்களில் 6.9 சதவீதம் வட்டி பெற முடியும். 5 வருட டைம் வைப்பிலிடப்பட்ட சேமிப்பு கணக்கில் 7.7 சதவிகித வட்டியுடன் திரும்பிப் பெற முடியும். இது காலாண்டுக்கு கணக்கிடப்படுகிறது. இந்த திட்டத்தில் வட்டி ஆண்டுதோறும் செலுத்தப்படும் இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் செக்ஷன் 80ஊ வருமான வரி சட்டம் 1961 மூலம் ஆதாயம் பெறலாம்.

15 வருட பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு: இந்த கணக்கு திட்டத்தில், வருடத்திற்கு 7.9 சதவீத வட்டி வழங்கப்படுகின்றது. வெறும் 100 ரூபாயில் இந்த திட்டத்தை துவங்கலாம். ஆனால், நடப்பாட்டில் குறைந்தது ரூ.500 வைப்பிலிட வேண்டும். அதிகபட்சம்இ 1,50,000 வரை செலுத்தலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் : வயது முதிர்ந்தோர் இத்திட்டத்தில் இணையலாம். இதில் வருடத்திற்கு 8.6 சதவிகித வட்டி கிடைக்கிறது. குறைந்தபட்சம் 1000 ரூபாய் இருந்தால் போதும். அதிகபட்சம் ரூ.15 லட்சத்தை தாண்டக் கூடாது.

தேசிய சேமிப்பு ஆவணங்கள் : சிய சேமிப்பு ஆவணங்கள் என்ற திட்டம் வருடத்திற்கு 7.9 சதவீத வட்டி தருகிறது. ஆண்டுதோறும் இதன் வட்டி ஒருங்கிணைக்கப்படும். ஆனால்இ இறுதிக் காலத்தில் தான் பணம் கிடைக்கும். 100 ரூபாய்க்கு 5 வருடங்கள் கழித்து 146.93 முதிர்ச்சி காலத்தில் வழங்கப்பட்டது.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Postal office saving schemes tax exemption

Next Story
ஆட்டோ மொபைல்ஸ் மந்த நிலையை சரி செய்ய புதிய திட்டங்கள் வெளியிடப்படும் – நிதி அமைச்சர்nirmala sithatraman budget
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com