postoffice account post office savings account: ஒவ்வொரு மாதமும் 5,100 வரையில் சம்பாதிக்கும் வகையில் சிறப்பு சேமிப்புத் திட்டம் தபால் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தபால் நிலயத்தால் செயல்படுத்தப்படும் மிகச் சிறந்த திட்டங்களில் இந்த மாத வருமானத் திட்டமும் ஒன்றாகும். இதில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 5,100 ரூபாய் வருமானத்தை ஈட்ட முடியும். இது உத்தரவாதமான லாபம் தரும் திட்டமாகும். நீங்கள் குறைந்த ரிஸ்க்குடன் முதலீடு செய்ய விரும்பினால், இந்தத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் குறைந்தது 1,500 ரூபாயை டெபாசிட் செய்யலாம்.
மாத வருமான திட்டத்தில் இணைய வாடிக்கையாளர்கள் தபால் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று ஒரு கணக்கைத் திறக்க முடியும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் வாடிக்கையாளரின் தேவையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் முதிர்வு காலத்துக்கு முன்னரே பணத்தை எடுக்க விரும்பினால் கணக்கின் 1 வருடம் முடிந்ததும் உங்களுக்கு அந்த வசதி கிடைக்கும். தற்போது, இந்தத் திட்டத்தில் 6.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. தனியாகவோ அல்லது கூட்டுக் கணக்கைத் திறப்பதன் மூலம் நீங்கள் இதில் முதலீடு செய்யலாம்.
வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீடு ரூ.4.5 லட்சம் ஆகும். ஆனால் கணவன்-மனைவி இருவரும் கூட்டுக் கணக்கின் கீழ் இந்தத் திட்டத்தில் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், அவர்கள் ஆண்டுக்கு 6.6 சதவீதம் என்ற விகிதத்தில் ரூ.61,200 சம்பாதிப்பார்கள். அதாவது, ஒவ்வொரு மாதமும் முதலீட்டாளருக்கு ரூ.5,100 வட்டி வருமானம் கிடைக்கும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Postoffice account post office savings account post office savings interest postoffice
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!