PPF: வரி இல்லா வருமானம், செய்த பங்களிப்புகளில் வருமான வரி நன்மை, முதலீடு செய்யப்பட்ட தொகையின் மீது மிக அதிக பாதுகாப்பு போன்ற காரணங்களால் சம்பளதாரர்கள் மத்தியில் கூட பிபிஎப் ஒரு பிரபலமான தேர்வாக அமைந்துள்ளது.
நீங்கள் ஒரு பிபிஎப் கணக்கை 23, ஜனவரி 2005 ல் ஆரம்பித்தால் அது 15 வருடங்கள் முடிவில் 31, மார்ச் 2020 ல் காலாவதியாகும். இந்த தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் முழு நிலுவைத் தொகையையும் திரும்பப் பெற நீங்கள் தகுதியுடையவர்கள் அதாவது ஏப்ரல் 1, 2020 க்கு பிறகு.
அப்டேட்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி வருமானத்துக்கு வரி விலக்கு
15 வருடங்கள் முடிவடைந்த பிறகு பிபிஎப் விதிகளின்படி, கணக்கு வைத்த்ருப்பவர் தங்கள் கணக்கை காலவரையின்றி 5 வருடங்கள் நீட்டிக்கலாம். நீட்டிக்கப்பட்ட காலத்தில் கணக்கு தாரர்கள் எந்த பங்களிப்பும் செய்யாமல் பகுதி திரும்ப பெறுதல் (withdrawals) செய்யலாம்.
எனவே 15 வருடங்கள் முடிந்த பின்னர் கணக்குதாரர்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன :அவர்கள் புது பங்களிப்பு செலுத்தி தங்கள் பிபிஎப் கணக்கை நீட்டிக்கலாம் அல்லது புதிய பங்களிப்பு செலுத்தாமல் பிபிஎப் கணக்கை நீட்டிக்கலாம்.
புது பங்களிப்பு செலுத்தி உங்கள் பிபிஎப் கணக்கை நீட்டித்தால்
புது பங்களிப்போடு பிபிஎப் கணக்கை தொடர கணக்கு தாரர்கள் தபால் நிலையம் அல்லது வங்கியை அணுகி விண்ணப்பம் H ஐ சமர்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை சமர்பிக்கவில்லையென்றால், நீங்கள் இந்த கணக்கில் நீங்கள் செய்யும் வைப்பு ஒழுங்கற்றதாக கருதப்படும். மேலும் புதிய பங்களிப்புக்கு வட்டி செலுத்தப்படாது. மேலும் பிரிவு 80C யின் கீழ் வரி நன்மை கிடைக்காது.
புது பங்களிப்பு செலுத்தாமல் உங்கள் பிபிஎப் கணக்கை நீட்டித்தால்
புது பங்களிப்பு செலுத்தாமல் உங்கள் பிபிஎப் கணக்கை நீட்டிக்க கணக்குதாரர்கள் தபால் நிலையம் அல்லது வங்கியை அணுகி எந்த விண்ணப்பமும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
இ.எம்.ஐ. கவலையை விடுங்க: முக்கிய வங்கிகள் லேட்டஸ்ட் அப்டேட் இங்கே!
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் பிபிஎப் கணக்கை முதிர்ச்சியடைந்த பிறகு நீட்டிப்பதோ அல்லது நீட்டிக்காமல் இருப்பதோ முழுமையாக கணக்கு தாரரை பொருத்தது. முதலீடு செய்யப்பட்ட தொகைக்கான பாதுகாப்பு, வரி இல்லாத வட்டி ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேலும் இந்த பணத்தை கொண்டு வேறு எந்த வித பெரிய செலவையும் செய்யும் திட்டம் இல்லையென்றால் கணக்குதாரர்கள் தங்கள் கணக்கை நீட்டிக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”