நீண்ட கால முதலீட்டாளர்கள் உறுதியான மற்றும் வரி இல்லாத வருமானத்தைப் பெற விரும்பும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) முதலீட்டை பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர்.
இந்த பிபிஎஃப் எனப்படும் அரசாங்க ஆதரவு முதலீட்டுத் திட்டம் தபால் அலுவலகத்தில் கிடைக்கிறது. இது ஒரு சிறுசேமிப்பு முதலீட்டு திட்டத்தைச் சேர்ந்தது.
இந்தத் திட்டத்தில் அரசாங்கம் காலாண்டு அடிப்படையில் வட்டியை மாற்றியமைக்கிறது, நடப்பு காலாண்டில் 7.1% ஆண்டுதோறும் வட்டி வழங்கப்படுகிறது.
இது பெரிய வங்கிகளின் நிலையான வைப்பு விகிதங்களை விட அதிகமாகும். PPF இன் முதிர்வு காலமான 15 வருடங்கள் காரணமாக, இது நீண்ட கால முதலீடாகக் கருதப்படுகிறது. முதிர்ச்சியின் போது PPF பங்களிப்புகள் மூலம் ஒருவர் ₹1 கோடியை வரியில்லா வருமானமாகப் பெறலாம், ஆனால் அதன் முதலீட்டுத் தொகையை ஒருவர் அறிந்திருக்க வேண்டும்.
அந்த வகையில், முதிர்ச்சியின் போது ₹1 கோடி கார்பஸை உருவாக்க, அடுத்த 15 ஆண்டுகளில் 7.1% வட்டி விகிதத்தை மதிப்பிடலாம். இது தொடர்பாக ETMoney வழங்கிய கணக்கீடுகளின்படி, ஒரு தனிநபர் தனது PPF கணக்கில் மாதம் ஒன்றுக்கு ₹35,000 முதலீடு செய்வதன் மூலம் தனது PPF கணக்கில் மொத்தம் ₹63 லட்சத்தை பராமரிக்க முடியும்,
அதற்காக அவர் ₹47.45 லட்சங்களை வட்டியாகப் பெறுவார். வருமானம் மற்றும் மொத்த தொகை முதிர்ச்சியின் போது தோராயமாக ₹1.10 கோடியாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதே முதலீட்டாளர் ₹2 கோடி முதிர்வு தொகை பெறுவதற்காக மாதாந்திரப் பணம் செலுத்தி தனது பிபிஎஃப் கணக்கை பராமரிக்க விரும்பும் நபர்கள் தனது PPF கணக்கை முதிர்ச்சியின் போது 5 ஆண்டுகள் கூடுதல் பிளாக்குகளுக்கு திரும்பப் பெறாமல் நீட்டிக்க முடியும்
கணக்கு முதிர்வு முடிந்தவுடன் கணக்கு வைத்திருப்பவர் கணக்கை கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, மொத்த முதலீட்டு காலத்தை 20 ஆண்டுகளாகக் கொண்டு வரலாம்.
இதை கணக்கில் எடுத்துக்கொண்டால், கணக்கு வைத்திருப்பவர் கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு ₹40,000 பங்களிக்க வேண்டும், இதன் மூலம் மொத்த முதலீடு ₹96 லட்சம், வட்டி வருமானம் ₹1.11 கோடி மற்றும் மொத்த முதிர்வுத் தொகை ₹2.07 கோடி ஆக இருக்கும்.
அதாவது, கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு கிடைக்கும்.
PPF திட்டத்தின் மிகவும் விரும்பப்படும் அம்சம் என்னவென்றால், வரி விலக்கு. அதாவது உங்கள் முதலீடு, வருமானம் மற்றும் முதிர்வு அனைத்தும் வரி இல்லாதவை.
ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ. 500 மற்றும் அதிகபட்சமாக ரூ. 1,50,000 முதலீடு செய்வதன் மூலம், ஒரு வயது வந்த இந்தியர் அல்லது மைனர் அல்லது மனநிலை சரியில்லாத நபர் சார்பாக ஒரு பாதுகாவலர் PPF கணக்கை தொடங்க முடியும்.
PPF வட்டியானது நிதி அமைச்சகத்தால் வெளியிடப்படும் காலாண்டு அறிவிப்புகளுக்கு உட்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு-கணக்கு திறக்கப்பட்ட ஆண்டு தவிர-ஒரு சந்தாதாரர் ஒரு நிதியாண்டிற்குள் ஒருமுறை கணக்கு இருப்பில் 50% வரை எடுக்கலாம்.
கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டின் முடிவில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சில அவசரகால சூழ்நிலைகளில் முன்கூட்டியே கணக்கை முடித்துக் கொள்வதும் அனுமதிக்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.