முதலீட்டு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF)பிரபலமான விருப்பங்களில் ஒன்றாகும். இதில் சிறந்த வருமானமும், வரியையும் மீச்சப்படுத்திட முடியும். அதேபோல், இந்த திட்டத்தில் அதிகபட்ச வட்டியை நீங்கள் எவ்வாறு பெறலாம் என்பதை அறிந்தால், உங்கள் தொகை பன்மடங்கு அதிகரிக்கும். அதன் வழிமுறையை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
PPF திட்டத்தின் வட்டி விகிதம் 7.1 சதவீதம் ஆகும். திட்டம் முதிர்ச்சியைடயும் போது வட்டி தொகை முக்கிய பங்கு வகிக்கும்.
PPF திட்டத்தில் ஒன்றரை கோடி சம்பாதிப்பது எப்படி?
நீங்கள் ஓராண்டுக்கு அதிகப்பட்சம் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதாவது, மாதம் 12,500 ரூபாய் செலுத்தி வர வேண்டும். 15 ஆண்டுகளில் திட்டம் முதிர்ச்சியடையும் போது, 5 ஆண்டுகள் நீட்டித்துக்கொண்டே இருக்கலாம். அப்படி, 30 ஆண்டு வருகையில், உங்களது PPF கணக்கில் இருக்கும் மொத்த தொகை 1 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரத்து 911 ஆகும். இதில், நீங்கள் முதலீடு செய்த தொகை வெறும் 45 லட்சம் தான். ஆனால், கிடைத்த வட்டி தொகை ரூ1 கோடியே 9 லட்சம் ஆகும்.
எனவே, இந்த திட்டத்தில் 25 வயதில் நீங்கள் முதலீடு செய்ய தொடங்கினால், 55 வயதில் கோடீஸ்வரர் ஆக இருப்பீர்கள் என்பது தான் உண்மை.
PPF வட்டி எப்படி கணக்கிடப்படுகிறது?
PPF வட்டி மாதந்தோறும் கணக்கிடப்படுகிறது. ஆனால், வட்டி தொகை ஆண்டு இறுதியில் தான் உங்கள் கணக்கில் செலுத்தப்படும். மாதந்தோறும் கணக்கிடப்படும் வட்டி தொகை, மார்ச் 31 ஆம் தேதி தான் செலுத்தப்படும். PPF கணக்கில் இந்த தேதிக்குள் பணம் செலுத்த வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. நீங்கள் ஒவ்வொரு மாதமோ, காலாண்டிலோ, அரையாண்டிலோ, ஒரே பிரிமியமாக வருடத்திற்கோ செலுத்தலாம்.
அதிக வட்டி பெறுவது எப்படி?
PPF கணக்கில் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரையுள்ள பணத்திற்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படுகிறது. நீங்கள் PPF கணக்கில் குறிப்பிட்ட மாதம் 5 ஆம் தேதிக்குள் பணம் டெபாசிட் செய்துவிட்டால், வட்டிக்கு கணக்கிடப்படும். ஆனால், ஆறாம் தேதி செலுத்தப்பட்டால், அந்த மாதத்தின கணக்கில் அப்பணம் கணக்கில் கொள்ளப்படாது. அடுத்த மாதம் தான் வட்டி தொகை உங்களுக்கு கிடைக்கும்.
உதாரணமாக, நீங்கள் ஏப்ரல் 5 ஆம் தேதி 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள். அப்போது, ஏற்கனவே மார்ச் 31 ஆம் தேதி 10 லட்சம் ரூபாய் கணக்கில் இருக்கும். ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 30 வரை, PPF தொகையானது 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். எனவே, இந்த தொகையை 7.1 சதவீத வட்டி விகிதத்தில் கணக்கிட்டால், 6 ஆயிரத்து 212 ரூபாய் கிடைத்திடும்.
அதே சமயம், 50 ஆயிரம் ரூபாயை ஏப்ரல் 5 ஆம் தேதி அல்லாமல் 6 ஆம் தேதி செலுத்தினால், அம்மாத்திற்கான வட்டி தொகைக்கு அப்பணம் சேர்க்கப்படாது. எனவே, கணக்கில் இருக்கும் 10 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே 7.1 வட்டி தொகை கணக்கிடப்படும். இதில், உங்களுக்கு 5 ஆயிரத்து 917 ரூபாய் மட்டுமே கிடைத்திடும்.
இந்த வழிமுறையில் முதலீட்டுத் தொகை 50,000 மட்டுமே, ஆனால் வட்டியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. PPF இல் உங்கள் பணத்திற்கு அதிகபட்ச வட்டியை விரும்பினால், இந்த ட்ரிக்ஸை மனதில் வைத்து, மாதத்தின் 5 ஆம் தேதிக்குள் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். PPF இல் 1.5 லட்சம் முதலீடு செய்தால் வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: 4 பீரிமியம் செலுத்தினாலே, ரூ.1 கோடி வரை நன்மைகள்; எல்ஐசி-ன் இந்த திட்டம் பற்றி தெரியுமா?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil