PPF, NSC, Sukanya Samriddhi Scheme interest rates : பப்ளிக் ப்ரோவிடன்ட் ஃபண்ட் (Public Provident Fund (PPF)), தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate (NSC)), கிஷான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரிதி திட்டம், சேவிங்க்ஸ் டெபாசிட் மற்றும் இதர சிறிய சேமிப்பு திட்டங்கள் அனைத்தின் வட்டி விகிதங்கள் மாறாமல் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
Advertisment
திட்டங்களும் வட்டி விகிதங்களும்
வ.எண்
திட்டத்தின் பெயர்
வழங்கப்படும் வட்டி விகிதம் எவ்வளவு?
1.
பி.பி.எஃப்
7.1%
2.
கிஷான் விகாஸ் பத்ரா
6.9 %
3.
தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate (NSC))
6.8%
4.
சுகன்யா சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Scheme)
7.6%
5.
மூத்த குடிமகன் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme)
7.4%
6.
மாதாந்திர வருமான கணக்கு திட்டம் ( monthly Income Account scheme)
6.6%
7.
Savings Deposit
4%
இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சேமிப்பு கணக்குகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வட்டி விகிதங்கள்
கொரோனா நோய் தொற்று காலத்தில் சிறிய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் நபர்களை காக்கும் வகையில் இந்த திட்டங்களை அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிலவிய அதே வட்டி விகிதம் செப்டம்பர் மாதம் 30ம் தேதி 2021 வரை தொடரும் என்று அறிவித்துள்ளது மத்திய அரசு.
ஒரு ஆண்டுக்கான டைம் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி 5.5% ஆக உள்ளது. மூன்று ஆண்டுகள் வரையிலான டைம் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டியும் 5.5% ஆக உள்ளது. ஐந்து ஆண்டுகள் வரையிலான டைம் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி 6.7% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil