Public Provident Fund | இன்றைய காலகட்டத்தில் அஞ்சல சேமிப்பு திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானதாக உள்ளன. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வது பூஜ்யம் ரிஸ்க் என முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது மாதந்தோறும் ரூ.500 செலுத்தினால் பி.பி.எஃப் திட்டத்தில் 15 ஆண்டுகளில் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
பி.பி.எஃப் (PPF) திட்டம்
எந்தவொரு முதலீட்டாளரும், பாதுகாப்பான முதலீடு செய்ய விரும்பினால், பி.பி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் ரூ. 500ல் கூட முதலீட்டைத் தொடங்கலாம்.
எனினும், ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்வது அவசியம். இல்லாவிட்டால் சிறிதளவு தொகை அபராதமாக விதிக்கப்படும்.
எவ்வளவு ரிட்டன்?
மேலும், பி.பி.எஃப் திட்டத்தில், 7.1 சதவீத வட்டி விகிதத்தில் கூட்டு வட்டியின் பலனைப் பெறுவார்கள். 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.500 டெபாசிட் செய்தால், வருடத்திற்கு ரூ.6000 டெபாசிட் செய்திருப்பீர்கள்.
பிபிஎஃப் கணக்கீட்டின்படி, 15 ஆண்டுகளில், இதன் மூலம் நீங்கள் ரூ.1,62,728 திரும்பப் பெறுவீர்கள். அதேசமயம், இந்த திட்டத்தை கூடுதலாக 5 ஆண்டுகள் நீட்டித்தால், 20 ஆண்டுகளில் ரூ.2,66,332 கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“