/tamil-ie/media/media_files/uploads/2023/03/small-saving-rates-re-l.jpg)
இந்தத் திட்டத்தில் 7.1 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
உங்களின் எதிர்கால சேமிப்புகளுக்கு ஏராளமான திட்டங்கள் உள்ளன. அதில் மிகவும் பிரபலமாக இரண்டு திட்டங்கள் உள்ளன.
அவை பிபிஎஃப் (PPF- பொது வருங்கால வைப்பு நிதி) மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் (FD -நிலையான வைப்பு) ஆகும். இதில் ஒருவருக்கு எது சிறந்தது என்பதை பார்க்கலாம்.
முதலீட்டு விருப்பங்கள்
பொது வருங்கால வைப்புநிதி (PPF) கணக்கிற்கான குறைந்தபட்ச காலம் 15 ஆண்டுகள் ஆகும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அதை 5 ஆண்டுகள் தொகுதிகளாக நீட்டிக்க வாய்ப்புகள் உள்ளன.
ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை மொத்தமாகவோ அல்லது அதிகபட்சமாக 12 தவணைகளில் முதலீடு செய்யலாம்.
பொதுமக்கள் வருங்கால வைப்பு நிதி
கணக்கைத் திறப்பதற்கு குறைந்தபட்ச மாதாந்திர வைப்புத்தொகை ரூ. 100 ஆகும். இருப்பினும், ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சத்துக்கும் அதிகமான முதலீடுகள் வரிச் சேமிப்புக்கு தகுதி பெறாது. பிபிஎஃப் (PPF) கணக்கில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது டெபாசிட் செய்யப்பட வேண்டும்.
மேலும், PPF இன் ஒரு குறிப்பிடத்தக்க நன்மை என்னவென்றால், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய இரண்டும் வரி கிடையாது. தற்போதைய PPF வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% ஆக உள்ளது.
ஃபிக்ஸட் டெபாசிட்
ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டை பொறுத்தவரை குறைந்தபட்சம் 7 நாள்கள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்து கொள்ளலாம்.
முதலீட்டு நோக்கத்தின் அடிப்படையில் FDயின் காலம் மாறுபடும். அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர அடிப்படையில் வட்டியை பெற்றுக் கொள்ளலாம்.
மூத்த குடிமக்களுக்கு, பெரும்பாலான வங்கிகள் அதிக நிலையான வட்டி விகிதத்தை வழங்குகின்றன, இதனால் அவர்கள் எந்த ஆபத்தும் இல்லாமல் பெரிய சேமிப்பை சாத்தியமாக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.