அவசர தேவைக்கு பணம் புரட்டுவது மிகவும் கடினமான ஒன்றாகும். அச்சமயத்தில் பார்த்து நமது வங்கி கணக்கிலும் பணம் இருக்காது. இக்கட்டான சூழ்நிலையில், நமக்கு உடனடியாக 10 ஆயிரம் கிடைக்கக்கூடிய வரப்பிரசாத திட்டமாக பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) உள்ளது.
இது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் (Zero Balance Account) என்பதால், ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் கணக்குகளின் என்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்த கணக்கில் ஓவர்டிராஃப்ட் (Overdraft) வசதியின் கீழ் பணம் இல்லாமலேயே 10000 ரூபாய் வரை பணம் பெற்றுக்கொள்ளலாம். ஓவர் டிராஃப்ட் வரம்பு முன்பு ரூ. 5,000 ஆக இருந்தது, பின்னர் ரூ.10,000 ஆக இரு மடங்காக உயர்த்தப்பட்டது. நிபந்தனையின்றி ரூ.2,000 வரை ஓவர் டிராஃப்ட் கிடைக்கும். ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெற, உங்கள் ஜன்தன் கணக்கு குறைந்தது 6 மாதங்கள் முன்பு தொடங்கப்பட்டதாக இருக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் ரூ.2,000 வரை மட்டுமே ஓவர் டிராஃப் பெற முடியும். மேலும் ஓவர் டிராஃப்ட்டுக்கான வயது வரம்பு 60லிருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டில் ஜன் தன் யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதே ஆண்டில் ஆகஸ்ட் 28ஆம் தேதி திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த கணக்கு தொடங்கியவர்களுக்கு, ரூபே கார்டும் (Rupay Card)வழங்கப்படுகிறது. அதன் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது, ஷாப்பிங் போன்றவற்றுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, 2 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடு வசதியும் ஜன் தன் கணக்கில் கிடைக்கிறது. எந்தவொரு வங்கியிலும் ஜன் தன் கணக்கு தொடங்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil