பிரவைக் டிஃபை எலக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Pravaig Defy electric SUV launched in India: பெங்களூருவைச் சேர்ந்த EV ஸ்டார்ட்-அப் நிறுவனமான Pravaig தனது முதல் மின்சார காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மாடலின் அனைத்து புதிய Pravaig Defy எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களும் இந்தியாவில் ரூ.39.50 லட்சம் தொடக்க விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
Advertisment
பிரவைக் டிஃபை எலக்ட்ரிக் எஸ்யூவி கார் செயல்திறன்
இந்தப் புதிய Pravaig Defy எலெக்ட்ரிக் SUV ஆனது 90.9 kWh பேட்டரி பேக்கைப் பெறுகிறது. இது இரட்டை மின்சார மோட்டார் அமைப்பைப் பெறுகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி 402 பிஎச்பி பவரையும், 620 என்எம் பீக் டார்க் திறனையும் உருவாக்குகிறது. இது 4.9 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும். தொடர்ந்து, மணிக்கு 210 கிமீ வேகத்தில் செல்லும். Pravaigஇன் படி, Defy மின்சார SUV 30 நிமிடங்களில் 0 முதல் 80 சதவீதம் வரை வேகமாக சார்ஜ் செய்யப்படலாம்.
காரின் வடிவமைப்பு
இந்தக் காரின் வடிவமைப்பைப் பொறுத்தவரை, இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள மற்ற EVகளைப் போலல்லாமல் உள்ளது.
பிரவைக் டிஃபை எலக்ட்ரிக் எஸ்யூவி கார்
இது சில ரேஞ்ச் ரோவர் கார்கள் மற்றும் பிரவைக் எக்ஸ்டிங்க்ஷன் Mk1 கான்செப்ட் செடானை ஒத்துள்ளது. இருந்தாலும் ஒட்டுமொத்த வடிவமைப்பு மிகவும் கூர்மையானது. மேலும், இது அனைத்து LED விளக்குகளையும் பெறுகிறது. Pravaig Defy ஆனது 5G இணைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், OTA மேம்படுத்தல்கள் போன்றவற்றுடன் 15.6-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டு உள்ளது.
காரின் விலை
புதிய பிரவைக் டிஃபை எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் ரூ.39.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவுகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.51,000 டோக்கன் தொகைக்கு ஆன்லைனில் விநியோகிக்கப்படுகின்றன. இது BYD Atto 3, Volvo XC40 ரீசார்ஜ் போன்றவற்றைப் பெறும்.
புதிய மாடல் எலக்ட்ரிக் கார் குறித்து பிரவைக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சித்தார்த்தா பக்ரி, “பழுதுபார்ப்பு, மேம்படுத்துதல் மற்றும் தரவு பாதுகாப்பின் உரிமையில் கவனம் செலுத்தும் ஒரே நிறுவனம் பிரவைக் மட்டுமே” எனத் தெரிவித்தார். இந்தக் காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. பயணிக்கலாம். அதாவது கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil