Premature Withdrawal of FD – குறைந்த அளவிலான அபாயங்களை கொண்டுள்ளது என்பதற்காக மட்டுமின்றி இந்தியாவில் பலராலும் நம்பிக்கையுடன் முதலீடு செய்யப்படும் சேமிப்புத் திட்டங்களில் ஒன்று ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கிகளின் எஃப்.டிக்களை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஃபிக்ஸ்ட் ரிட்டர்ன்ஸ், குறைவான அபாயங்கள் மற்றும் சீரான இடைவெளியில் கிடைக்கும் வட்டி ஆகியவையும் இதனை மக்கள் தேர்வு செய்ய முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
வங்கிகளின் எஃப்.டி. 7 நாட்கள் முதல் 10 வருடங்களான கால அளவைக் கொண்டுள்ளன. அதனால் தான் முதலீட்டாளார்கள் எமெர்ஜென்சி தேவைக்காவும் எஃப்.டியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். ஒருவர், முதிர்வு ஏற்படுவதற்கு முன்பே பணத்தை வித்ட்ரா செய்துக் கொள்ள இயலும். ஆனால் அதற்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதிர்வுக்கு முன்பே பணம் திரும்பப் பெறும் வசதி, முதிர்வுக்கு முன்பு பணம் திரும்பப் பெற முடியாத வசதி என இரண்டு தேர்வுகளை எஃப்.டி. கணக்கை துவங்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்குகின்றன. நீங்கள் முதிர்வு காலத்திற்கு முன்பு பணத்தை எடுக்கும் வசதியை தேர்வு செய்யவில்லை என்றால் கட்டாய லாக் – இன் காலத்தை கடந்தே ஆக வேண்டும். அதற்கு முன்பு பணம் எடுத்தல் அபராதத்திற்கு வழி வகுக்கும். ஆனாலும் இது தொடர்பாக ஒவ்வொரு வங்கிகளும் அவர்களுக்கென்று தனித்துவமான விதிமுறைகளை வகுத்துள்ளனர்.
முதிர்வுக்கு முன்பே பணத்தை எடுத்தால் அபராதம் எவ்வளவு?
வங்கிகளில் நீங்கள் துவங்கியுள்ள எஃப்.டிக்களை முதிர்வுக்கு முன்பே மூடல் அல்லது அதில் இருந்து பணத்தை எடுத்தல் போன்றவை 0.55% முதல் 1% வரையிலான எஃப்.டி. தொகையை அபராதமாக செலுத்த வைக்கும். உதாரணமாக நீங்கள் ICICI ரூ. 5 கோடியை வைப்பு நிதியில் வைத்திருக்கின்றீர்கள். உங்களின் வைப்பு நிதிக்கான கால முதிர்வுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ளது என்று வைத்துக் கொண்டால், முதிர்வுக்கு முன்பு நீங்கள் பணம் எடுத்தால் உங்கள் வைப்புத் தொகையில் இருந்து 0.5% மட்டுமே கட்டணமாக வங்கிகள் பெற்றுக் கொள்ளு. அதே நேரத்தில் உங்கள் எஃப்.டிக்கான முதிர்வு ஒரு வருடத்திற்கு மேலே இருந்தால் 1% வரை அபராதம் செலுத்த வேண்டும்.
எஸ்பிஐ வங்கியில் எஃப்டியில் இருந்து முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு, வழக்கமாக ஒருவருக்கு 5 லட்சத்துக்கும் குறைவான தொகைக்கு 0.05 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். 5 லட்சத்திற்கு மேல் 1 கோடிக்குள் என்றால் அபராதம் மதிப்பு 1%ஆக இருக்கும். நீங்கள் ரூ. 3 லட்சம் உங்களின் வங்கியில் எஃப்.டியாக வைத்திருக்கிறீர்கள் என்றால் ரூ. 1500 அபராதமாக செலுத்த வேண்டும். 18 லட்சம் வைத்திருந்தால் ரூ. 18 ஆயிரம் கட்ட வேண்டும். HDFC வங்கியானது ஸ்வீப்-இன்கள் மற்றும் பகுதியளவு திரும்பப் பெறுதல் உட்பட FD களில் இருந்து முன்கூட்டியே பணம் எடுப்பதற்கு 1 சதவிகிதம் அபராதம் விதிக்கிறது.
குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு குறிப்பிட்ட சில வகை வாடிக்கையாளர்களின் நிலையான வைப்புத்தொகையின் மீதான அபராதத்தை சில வங்கிகள் தள்ளுபடி செய்கின்றன மற்றும் முன்கூட்டியே FD திரும்பப் பெறுவதற்கு அபராதம் விதிக்காது என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, முன்கூட்டியே பணம் எடுப்பதற்கு முன் வங்கியில் விதிமுறைகளைப் பற்றிச் சரிபார்க்கவும். கூடுதலாக, பெரும்பாலான வங்கிகளில், கணக்கைத் தொடங்கிய 7 அல்லது 14 நாட்களுக்குள் திரும்பப் பெறுவதற்கு அபராதம் விதிக்கப்படாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil