Advertisment

மூன்று ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்; 8.1% வட்டி வழங்கும் தனியார் வங்கிகள்!

மூன்று ஆண்டுகள் வரையிலான பிக்ஸட் டெபாசிட் முதலீடு திட்டங்களுக்கு, தனியார் வங்கிகள் 8.1 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. மூத்த குடிமக்களுக்கு பலன் அளிக்கும் வகையிலான இந்தத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வோம்.

author-image
WebDesk
New Update
போலீசில் புகார்

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு தனியார் வங்கிகள் 8.1சதவீத வட்டி வழங்குகின்றன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு தனியார் வங்கிகள் 8.1 சதவீதம் வரை  வட்டி வழங்குகின்றன. மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.

பல்வேறு தனியார் துறை வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு 8.1% வரையிலான வட்டி விகிதத்தை ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்குகின்றன. இந்த வட்டி விகிதங்கள் ரூ.2 கோடிக்குக் குறைவான  ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்குப் பொருந்தும்.

Advertisment

டிசிபி (DCB) வங்கி

மூத்த குடிமக்கள் DCB வங்கியில் 26 மாதங்கள் மற்றும் 37 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு 8.1% வட்டி விகிதத்தைப் பெறலாம்.

ஆர்.பி.எல் (RBL) வங்கி

ரத்னாகர் பேங்க் லிமிடெட் (ஆர்.பி.எல்.) 24 மாதங்கள் 1 நாள் முதல் 36 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் மூத்த குடிமக்களுக்கான FDக்கு 8% வட்டி விகிதம் வழங்குகிறது.

இண்டஸ்இந்த் (IndusInd) வங்கி

இண்டஸ்இந்த் வங்கி 2 ஆண்டுகள் 9 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் 3 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் எஃப்.டி.க்களுக்கு மூத்த குடிமக்களுக்கு 8% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

ஐடிஎஃப்சி (IDFC) வங்கி

ஐடிஎஃப்சி (IDFC) வங்கி 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 7.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 7.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

TDS எப்போது கழிக்கப்படும்?

ஒரு குறிப்பிட்ட வங்கியில் உள்ள அனைத்து நிலையான வைப்புகளிலிருந்தும் ஒட்டுமொத்த வட்டி வருமானம் ரூ. 50,000 ஐத் தாண்டினால், டிடிஎஸ் செலுத்த என்பதை மூத்த குடிமக்கள் அறிந்திருக்க வேண்டும்.

TDS விகிதம் 10%

இருப்பினும், ஒரு மூத்த குடிமகன் அவர்களின் பான்கார்டு எண்ணை (PAN) வழங்கத் தவறினால், TDS விகிதம் 20% ஆகிவிடும்.

இதில், விதிவிலக்கு என்னவென்றால், மூத்தக் குடிமக்களின் மொத்த வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை மீறவில்லை என்றால், டிடிஎஸ் விலக்கைத் தடுக்க அவர்கள் படிவம் 15H ஐ வங்கிகளுக்குச் சமர்ப்பிக்கலாம்.

மேலும், ஒரு மூத்த குடிமகனின் மொத்த வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை மீறும் சூழ்நிலையில், அவர்களுக்கு TDS திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment