Advertisment

பிரதான குடியிருப்பு சந்தைகளில் மோசமான வளர்ச்சியை எட்டிய சொத்து மதிப்பு

அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்பு 11 சதவிகிதம் உயர்ந்து ஒரு சதுர அடிக்கு ரூபாய் 5,194/- என்ற அளவை கடந்த பத்து ஆண்டுகளில் எட்டியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
registration token , tn Registration department

registration token , tn Registration department

property value dismal growth in prime residential markets : பிரதான குடியிருப்பு சந்தைகளில் 5 வருடங்களாக சொத்து மதிப்பு மோசமான வளர்ச்சியை கண்டுள்ளது.  கடந்த 5 வருடங்களில் பெரும்பான்மையான இந்தியாவின் பிரதான குடியிறுப்பு சந்தைகள் மோசமான வளர்ச்சியை கண்டுள்ளது. தேவையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மதிப்பு உயர்வை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துளதை இது காட்டுகிறது என PropTiger.com இன் தகவல்கள் காட்டுகிறது.

Advertisment

7 சதவிகித கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் (compound annual growth rate) என்ற அடிப்படையில் மார்ச் 2015 மற்றும் மார்ச் 2020க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஹைதராபாத் சொத்தின் மதிப்பில் கடுமையாக உயர்வைக் கண்டது. ஹைதராபாத் தவிர மும்பை மற்றும் பெங்களூரூ நகரங்கள் முறையே 2.8 சதவிகிதம் மற்றும் 2.1 சதவிகிதம் என்ற அடிப்படையில் குறிப்பிடதக்க கூட்டு ஆண்டு வளர்ச்சி விகித உயர்வைக் கண்டன. மறுபுறம் அதே ஐந்து ஆண்டு காலகட்டத்தில் குருகிராம் மற்றும் நொய்டா சந்தைகள் சொத்து மதிப்பில் சரிவைக் கண்டன.

மேலும் படிக்க : கிழிந்த ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது? எஸ்.பி.ஐயின் அறிவிப்பைப் பாருங்கள்!

முழுமையான மாற்றம் ஏற்பட்ட மார்ச் 2015 முதல் மார்ச் 2020 காலகட்டத்தில், ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளின் (apartments) சராசரி மதிப்பு 40 சதவிகிதம் அதிகரித்து ஒரு சதர அடிக்கு ரூபாய் 5,318/- என்ற அளவை எட்டியது. மும்பையில் சராசரி மதிப்பு 15 சதவிகிதம் உயர்ந்து ஒரு சதுர அடிக்கு ரூபாய் 9,446/- என்ற அளவை எட்டியது. மூன்றாம் இடமான இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகர் பெங்களூருவில் சராசரி அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்பு 11 சதவிகிதம் உயர்ந்து ஒரு சதுர அடிக்கு ரூபாய் 5,194/- என்ற அளவை கடந்த பத்து ஆண்டுகளில் எட்டியுள்ளது.

அதே சமயம் அகமதாபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் பூனே ஆகிய நகரங்களில் ஓரளவு தான் அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் குருகிராம் மற்றும் நொய்டா ஆகிய இரண்டு NCR சந்தைகள் விலையில் சரிவை சந்தித்தன. கொல்கத்தா மற்றும் சென்னையில் சராசரி சொத்தின் மதிப்பு மார்ச் 2015 ஐ விட மார்ச் 2020 ல் 4 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பூனேவில் உயர்வு 2 சதவிகிதம் தான் அதே சமயம் அகமதாபாத் 3 சதவிகித உயர்வைக் கண்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment