சம்பளத்தில் 6 மடங்கு தொகை கிடைக்கும்… PF அக்கவுன்ட் ரொம்ப முக்கியம்!

Benefits associated with Provident Fund account Tamil News: ஒவ்வொரு நிதியாண்டிற்கும் பி.எஃப் தொகையின் வட்டி விகிதத்தை ஈ.பி.எஃப்.ஓ அமைப்பு அறிவிக்கிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில், 8.5 சதவீத வீதத்தில் வட்டி செலுத்த ஈ.பி.எஃப்.ஓ அமைப்பு (EPFO) ​​முடிவு செய்துள்ளது.

Provident Fund Benefits Tamil News: Benefits associated with Provident Fund account

Provident Fund Benefits Tamil News: நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிபவராகவும், மாத சம்பளம் வாங்கும் நபராகவும் இருந்தால், ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்திலிருந்து ஒரு நிலையான தொகை பி.எஃப் நிதியில் டெபாசிட் செய்யப்படுவதை நீங்கள் அறிந்திருக்க கூடும். இந்த நிதியை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நிர்வகிக்கிறது. நீங்கள் பிஎஃப் நிதியில் டெபாசிட் செய்வது உங்களுக்கு ஒரு பெரிய மூலதனமாகும். வரி மற்றும் முதலீட்டு வல்லுநர்கள் எப்போதுமே பி.எஃப் நிதிகளில் உள்ள வைப்புத்தொகை மிகவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே திரும்பப் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். பி.எஃப் கணக்கு மற்றும் பி.எஃப் நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு பல வகையான பிரத்யேக சலுகைகளைப் பெறுவீர்கள் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள். இது போன்ற சலுகைகள் மற்ற நிதிகளில் அரிதாகவே காணப்படுகின்றன.

பி.எஃப் தொடர்பான சிறப்பு நன்மைகள்

ஒவ்வொரு நிதியாண்டிற்கும் பி.எஃப் தொகையின் வட்டி விகிதத்தை ஈ.பி.எஃப்.ஓ அமைப்பு அறிவிக்கிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில், 8.5 சதவீத வீதத்தில் வட்டி செலுத்த ஈ.பி.எஃப்.ஓ அமைப்பு (EPFO) ​​முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 (சி) இன் கீழ் வரி விலக்கின் பயனைப் பெறுவீர்கள். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பிற தேவைகளுக்காக பி.எஃப் தொகையில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையிலிருந்து ஓரளவு திரும்பப் பெற மத்திய அரசு அனுமதிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது கூட பி.எஃப் பங்குதாரர்களை ஓரளவு திரும்பப் பெற அரசாங்கம் சிறப்பு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டம் ஓய்வூதிய திட்டம், 1995 (இபிஎஸ்) இன் கீழ் வாழ்நாள் ஓய்வூதியத்தை வழங்குகிறது.

ஈ.பி.எஃப்.ஓ அமைப்பின் உறுப்பினர் ஒருவர தொடர்ந்து பி.எஃப் நிதியில் பங்களிப்பு செய்தால், அவரின் துரதிர்ஷ்டவசமான மரணத்திற்கு பிறகு, குடும்ப உறுப்பினர்கள், 1976ன் சட்டத்தின் கீழ் காப்பீட்டுத் திட்டத்தை பெறலாம். இந்த தொகை கடைசி சம்பளத்திற்கு 20 மடங்குக்கு சமமாகவும், 6 லட்சம் வரையிலும் இருக்கலாம். இந்த விகிதத்தில் இந்த தொகை பி.எஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் பி.எஃப் நிதியில் பணியாளரின் அடிப்படை சம்பளம் மற்றும் கொடுப்பனவில் 12 சதவீதத்திற்கு சமமான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஈபிஎஃப் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டுமே தங்கள் சார்பாக பிஎஃப் நிதிகளில் முதலீடு செய்ய முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Provident fund benefits tamil news benefits associated with provident fund account

Next Story
Post Office Scheme: நம்புங்க… இத்தனை மாதங்களில் உங்க பணம் டபுள் ஆகும்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express