ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் வங்கியிடமிருந்து வட்டி கிடைக்கும். எனினும், ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி வேறுபடும்.
Advertisment
மேலும், வட்டி விகிதம் வைப்பு மற்றும் காலத்தைப் பொறுத்து மாறுபடும். எனவே. அவற்றில் முதலீடு செய்வதற்கு முன், நீங்கள் முதலில் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களின் பட்டியலை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
அந்த வகையில், ஜூன் 7, 2023 நிலவரப்படி, பொதுத்துறை வங்கியின் சிறந்த ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள வட்டி விகிதங்கள் சிறப்பு வைப்புத்தொகை உட்பட வங்கியில் உள்ள காலக்கெடு வேறுபடும். மேலும் பட்டியலில் சூப்பர் மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் விகிதங்கள் கொடுக்கப்படவில்லை. மூத்த குடிமக்கள் வழக்கமான குடிமக்களை விட அதிக வட்டி விகிதம் கிடைக்க வாய்ப்புள்ளது. அவர்களின் நிலையான வைப்புத்தொகைக்கான கூடுதல் வட்டி விகிதமும் வேறுபடுகிறது.
அதாவது, 0.25 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை வேறுபாடு இருக்கும். பொதுவாக, ஃபிக்ஸட் டெபாசிட்டின் கால அளவு மற்றவற்றுடன் வட்டி விகிதத்தை தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான அளவுகோல்களில் ஒன்றாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“