Advertisment

ரூ.416 இருந்தால் போதும், மிக விரைவில் லட்சாதிபதி ஆகலாம்; PPF திட்டங்களின் சிறப்பம்சங்கள் என்ன?

Best Investment Scheme: PPF மீதான தற்போதைய வட்டி விகிதம் 7.1 சதவீதமாகும்.

author-image
WebDesk
New Update
Public provident fund Tamil News: Loan Against PPF now at 1% Interest Rate in tamil

PPF அல்லது பொது வருங்கால வைப்பு நிதி என்பது நீண்ட கால அடிப்படையில் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். மாத சம்பளம் வாங்குவோர்களுக்கு ஏற்ற திட்டம் இது. பாதுகாப்பான கணிசமான வருவாய் கொடுக்கும் முதலீடு என்பதால் நீண்ட கால நோக்கங்களுக்காக குறிப்பாக ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. பிபிஎஃப் கணக்கைத் துவங்க குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம்.

Advertisment

அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள முக்கிய அம்சமே வட்டி விகிதம் தான். PPF மீதான தற்போதைய வட்டி விகிதம் 7.1 சதவீதமாகும் (மார்ச் 31, 2021 உடன் முடிவடைந்த காலாண்டில்) .இது மற்ற வங்கி மற்றும் சிறிய சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் வட்டியை விட அதிகமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட ரூ .1.5 லட்சத்தை முதலீடு செய்ய வேண்டும். தினமும் ரூ.416 என கணக்கிட்டால் மாதத்திற்கு ரூ.12,500 வரும். 15 ஆண்டுகளில் ரூ.40 லட்சத்து 68 ஆயிரத்து 209 கிடைக்கும். மொத்த முதலீடு ரூ. 22.5 லட்சமாகவும், வட்டி ரூ.18,18,209 ஆகவும் இருக்கும்.

பிபிஎஃப் திட்டத்தில் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக ஒரு கோடி ரூபாயாக மாற்ற நீங்கள் தொடர்ந்து பத்து ஆண்டுகள் முதலீடு செய்யலாம். முதிர்ச்சியடைந்த அடுத்த ஐந்து ஆண்டுகளில், உங்கள் முதலீடு ரூ.66,58,288 ஆக மாறும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், அதாவது நீங்கள் பிபிஎப்பில் முதலீடு செய்யத் தொடங்கிய 25 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் முதலீடு இறுதியாக ரூ .1,03,08,015 ஆக மாறும்.

பிபிஎஃப் கணக்கைத் துவங்கிய 3வது ஆண்டிலிருந்து கடன் பெறலாம். நிலுவைத் தொகையில் 25% முதல் நிதியாண்டின் இறுதியில் கிடைக்கப்பெறும். பிபிஎஃப் வட்டி விகிதத்திற்கு மேல் கடன் மீதான வட்டி விகிதம் ஆண்டுக்கு 2 % இருக்கலாம்.

அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Public Provident Fund Interest Rates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment