பிபிஎஃப் கணக்கின் வட்டி வீதம் இம்மாதம் முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், பிபிஎஃப் திட்டத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய 5 மாற்றங்கள் குறித்து காண்போம்.
PPF அல்லது பொது வருங்கால வைப்பு நிதி, பாதுகாப்பான முதலீட்டிற்கு ஒரு மிகச்சிறந்த தேர்வாகும். வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் PPF கணக்கைத் தொடங்கி முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தில், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 மற்றும் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். தற்போதைய பிபிஎஃப் வட்டி விகிதம் 7.10 சதவீதம் ஆகும்.
இந்தசெப்டம்பர் காலாண்டில் பிபிஎஃப் வட்டி விகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த செப்டம்பர் காலாண்டில் அரசு மாற்றியுள்ள முக்கிய விதிகளை பார்ப்போம்.
- PPF கணக்கில் பணம் வைப்பதற்கான விதிகள்
PPF கணக்கில் முதலீடு ரூ.50 இன் மடங்குகளில் இருக்க வேண்டும். இந்தத் தொகை ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும். முழு நிதியாண்டிலும் நீங்கள் PPF கணக்கில் 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதில் மட்டுமே வரி விலக்கு பலன் கிடைக்கும். இது தவிர, மாதம் ஒருமுறை பிபிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
- கடன்களுக்கான வட்டி விகிதம்
பிபிஎஃப் கணக்கில் உள்ள தொகைக்கு கடன் பெறலாம். இந்த வட்டி விகிதம் கடந்த சில நாள்களில் 2 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. கடனின் அசல் தொகையை செலுத்திய பிறகு, நீங்கள் இரண்டு தவணைகளுக்கு மேல் வட்டி செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் வட்டி கணக்கிடப்படுகிறது.
- முதிர்வு காலத்திற்குப் பிறகும் கணக்கு செயலில் இருக்கும்
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில்
15 வருடங்கள் முதலீடு செய்த பிறகு, நீங்கள் முதலீட்டில் ஆர்வம் காட்டவில்லை என்றால், நீங்கள் முதலீடு இல்லாமல் கூட PPF கணக்கை தொடரலாம். 15 ஆண்டுகள் முடிந்த பிறகு இந்தக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டிய அவசியமில்லை. முதிர்வுக்குப் பிறகு PPF கணக்கை நீட்டிக்கத் தெரிவு செய்வதன் மூலம் நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே பணத்தை எடுக்க முடியும்.
- படிவம் 1
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) கணக்கைத் தொடங்க, படிவம் A க்குப் பதிலாக படிவம் 1 ஐ சமர்ப்பிக்க வேண்டும். PPF கணக்கை 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெபாசிட்களுடன் நீட்டிக்க, முதிர்வுக்கு ஒரு வருடம் முன்பு, படிவம் H க்குப் பதிலாக படிவம்-4 இல் விண்ணப்பிக்க வேண்டும்.
- PPF மீதான கடன்
பிபிஎஃப் கணக்கில் உள்ள மொத்த இருப்பில் 25 சதவீதம் வரை கடன் பெறலாம். அதாவது, 31 ஆகஸ்ட் 2022 அன்று நீங்கள் கடனுக்கு விண்ணப்பித்தீர்கள். இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (31 ஆகஸ்ட் 2020), உங்கள் PPF இல் 1 லட்சம் ரூபாய் இருந்தால், அதில் 25 சதவிகிதம் அதாவது 25 ஆயிரம் ரூபாய் வரை பெறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.