Public provident fund maturity interest : உங்களிடம் இருக்கும் சேமிப்பு பணத்தை முறையாக முதலீடு செய்து அதில் பாதுகாப்பான ரிட்டர்ன்ஸை பெற விரும்பினால் நீங்கள் இந்த பி.பி.எஃப். சேமிப்பு திட்டம் குறித்து கொஞம் அறிந்து கொள்வது அவசியமாகிறது. அரசால் பாதுகாக்கப்படும் ஒரு சேமிப்பு திட்டம் இது என்பதால் உங்களின் முதலீடு பாதுகாப்பாக இருக்கும்.
நீண்ட கால சேமிப்பு திட்டமான இதில் நீங்கள் மாதம் ரூ. 1000 முதலீடு செய்து வந்தால் ரூ. 12 லட்சம் வரை உங்களால் ரிட்டர்ன்ஸ் பெற இயலும். ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை வட்டி விகிதம் மாற்றப்படும். சராசரி வட்டி விகிதமானது 7 முதல் 8 வரை இருக்கும். தற்போது இதற்கு வழங்கப்படும் வட்டியானது 7.1% ஆக உள்ளது. பொதுவாக வங்கி சேவைகளில் வழங்கப்படும் எஃப்.டிக்கான வட்டியைக் காட்டிலும் இது அதிகமானது.
வருடத்திற்கு நீங்கள் ரூ. 500 முதல் ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதன் மெச்சூரிட்டி வரம்பு 15 வருடங்கள் ஆகும். நீங்கள் 15 ஆண்டுகள் கழித்து இந்த பணத்தை எடுத்துக் கொள்ள இயலும் அல்லது மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு திட்டத்தை நீட்டித்துக் கொள்ளவும் முடியும். நீங்கள் மாதத்திற்கு ரூ. ஆயிரம் முதலீடாக செலுத்துகிறீர்கள் என்றால் 15 ஆண்டுகளில் உங்களின் சேமிப்பில் 1.80 லட்சம் இருக்கும். இதற்கான வட்டியானது ரூ. 1.45 லட்சமாக இருக்கும். எனவே உங்களின் மெச்சூரிட்டியின் போது நீங்கள் ரூ. 3.25 லட்சத்தை பெற முடியும். மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்களின் முதலீட்டை ரூ. 1000/மாதம் என்ற கணக்கில் நீட்டிக்கிறீர்கள் என்றால் உங்களின் முதலீடு ரூ. 2.40 லட்சமாக இருக்கும். உங்களுக்கான வட்டி தொகை 2.92 லட்சமாக இருக்கும். மெச்சுரிட்டியின் போது நீங்கள் ரூ. 5.32 லட்சம் பெற முடியும்.
உங்களின் சேமிப்பை நீங்கள் 30 ஆண்டுகளாக நீட்டித்தால் உங்களின் சேமிப்பு முதலீட்டு தொகை ரூ.3.60 லட்சமாகவும், அதற்கான வட்டி 8.76 லட்சமாகவும் இருக்கும். 30 வருடங்கள் கழித்து உங்களால் 12.36 லட்சம் பணத்தை மெச்சூரிட்டியாக பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் ஐந்து ஆண்டுகள் பி.பி.எஃப்.-ல் தவணை மாறாமல் முதலீடு செய்து வந்தால் 6வது ஆண்டில் நீங்கள் கடனை வாங்கிக் கொள்ள முடியும். 5 ஆண்டுகள் கழித்து அதில் இருந்து பணத்தையும் எடுத்துக் கொள்ள இயலும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil