interest rate on ppf, ppf loan, loan against ppf, ppf, public provident fund, ppf account, ppf calculator
வருமானத்தை கூட்டுதல் மற்றும் வரிச் சலுகைகள் உட்பட பல வித நன்மைகளோடு பொது வருங்கால வைப்பு நிதி வருகிறது. கடந்த வருடம் திட்டத்தில் செய்துள்ள மாற்றங்களின்படி டிசம்பர் 12, 2019 முதல் அல்லது அதற்கு பிறகு எடுக்கும் எந்தவொரு கடனுக்கும் முன்பிருந்த 2 சதவிகிதம் என்பதற்கு பதிலாக ஆண்டுக்கும் ஒரு சதவிகித என்ற விகிதத்தில் வசூலிக்கப்படும். ஒரு சதவிகிதமாக இருந்தாலும், பிபிஎப் கடனுக்கான வட்டி விகிதம் வேறு எந்த விதமான கடனை விடவும் மிக குறைவானது என்றாலும், அதற்கு செல்ல வேண்டாம் என நிபுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
அதன் வரி சலுகைகள் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் பிபிஎப் என்பது ஒரு பிரபலமான முதலீட்டுக்கான தேர்வாக உள்ளது. மேலும் இது EEE நிலையை (exempt-exempt-exempt) அனுபவிக்கிறது, அதாவது முதலீடு செய்யும் போது, accumulation மற்றும் பணத்தை திரும்ப எடுக்கும் போது முதலீட்டாளர்களின் பணத்துக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
Advertisment
Advertisements
உங்கள் பிபிஎப் கணக்குக்கு எதிராக நீங்கள் ஏன் கடன் வாங்க கூடாது
நீங்கள் உங்கள் பிபிஎப் கணக்குக்கு எதிராக கடன் வாங்கினால் உங்கள் பிபிஎப்’ல் சம்பாதித்த வரிவிலக்கு வட்டி தொகையை இழக்க நேரிடும். பிபிஎப் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட கடனுக்கு ஆண்டுக்கும் ஒரு சதவிகிதம் என்ற அடிப்படையில் உங்களிடம் வசூலிக்கப்பட்டாலும் அசல் தொகையை வட்டியுடன் திரும்ப செலுத்தும் நேரம் வரை எந்தவித வட்டியும் உங்கள் பிபிஎப் கணக்கில் செலுத்தப்படமாட்டாது.
எனவே பிபிஎப் கணக்குக்கு எதிராக கடன் வாங்கும் போது வரிவிலக்கு வட்டியை நீங்கள் இழக்கிறீர்கள் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் எடுக்கும் கடனின் அளவு உங்கள் பிபிஎப் கணக்கில் இரண்டாம் ஆண்டு இறுதியில் இருக்கும் அளவில் 25 சதவிகிதத்தை தாண்டக் கூடாது. பிபிஎஃப் கணக்கில் கடன் பொதுவாக ஒப்பீட்டளவில் சிறிய தொகைகளுக்கும் குறுகிய காலத்திற்கும் ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil