Advertisment

ரூ1 கோடி வருமானம்; PPF திட்டம் பற்றிய முழுத் தகவல்கள் இதோ…

பிக்ஸிட் டெபாசிட்களை விட சிறந்த முதலீட்டு திட்டம்; பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் மூலம் கோடீஸ்வரர் ஆவது எப்படி?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரூ1 கோடி வருமானம்; PPF திட்டம் பற்றிய முழுத் தகவல்கள் இதோ…

PPF Interest Rate 2022: Want Rs 1 crore? Know how to calculate interest on Public Provident Fund amount: பொது வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டமாகும், இது இறையாண்மை உத்தரவாதத்துடன் வருகிறது. PPF திட்டமானது, பொதுவாக பிக்ஸிட் டெபாசிட் வருமானத்தை விட அதிகமாக உள்ளது. மேலும், சாமானியர்களுக்கு பல நன்மைகளுடன் வருகிறது.

Advertisment

நீங்கள் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக 500 ரூபாய் முதல் PPF கணக்கைத் தொடங்கலாம் மற்றும் PPF கணக்கில் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். நீங்கள் சம்பளம் வாங்குபவராக இருந்தாலும், ஒரு சிறிய அல்லது பெரிய வணிகத்தை நடத்துகிறவராக இருந்தாலும், சுயதொழில் செய்பவராக இருந்தாலும், ஃப்ரீலான்ஸராக இருந்தாலும் அல்லது ஏதேனும் ஒரு வேலையைச் செய்கிறவராக இருந்தாலும், நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த முதலீட்டின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் கருவியாக PPFஐப் பார்க்க வேண்டும். மேலும், இது உத்திரவாதமான கூட்டு வருடாந்திர வருவாயை அளிக்கிறது.

நீண்ட காலத் திட்டத்தில் செல்வத்தைக் குவிக்க PPF கணக்கைப் பயன்படுத்தலாம். ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (EPF)-ன் கீழ் வராத தனிநபர்கள், PPF-ஐ நீண்ட கால ஓய்வூதிய திட்டமிடல் விருப்பமாகப் பயன்படுத்தலாம்.

PPFன் பல சுவாரசியமான பலன்கள் மற்றும் அம்சங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

PPF மூலம் 1 கோடி பெற முடியுமா?

நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு, PPF ஒரு பாதுகாப்பான விருப்பமாகும். வரிச் சலுகைகள் மட்டுமின்றி, பிபிஎஃப் மூலம் ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட கார்பஸை உருவாக்கலாம்.

PPF மீது அரசாங்கம் வழங்கும் தற்போதைய PPF வட்டி விகிதம் 7.1% ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது. இந்த விகிதம் அப்படியே இருந்தால், ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் டெபாசிட் செய்தால் 15 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.40 லட்சம் கிடைக்கும். 15 ஆண்டுகள் கட்டாய முதிர்வுக் காலம் முடிந்த பிறகு, முதலீட்டாளர்களுக்கு PPF கணக்கை 5 ஆண்டுகள் தொகுதிகளாக நீட்டிக்க விருப்பம் உள்ளது.

எனவே, பிபிஎஃப் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்தை 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், சுமார் ரூ.66 லட்சம் கார்பஸ் கிடைக்கும். நீங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சத்தை தொடர்ந்து முதலீடு செய்தால், உங்கள் பிபிஎஃப் இருப்பு 25 ஆண்டுகளில் தோராயமாக ரூ.1 கோடி இருக்கும். முதலீட்டுக் காலத்தில் வட்டி விகிதத்தை அரசாங்கம் திருத்தியமைத்து அதிகரித்தால், இந்த இலக்கை விரைவாக அடையலாம்.

PPF வட்டி விகிதம்

PPF மீதான வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் அரசாங்கத்தால் திருத்தப்படுகிறது. தற்போதைய வட்டி விகிதம் 7.1% மற்றும் இது டிசம்பர் 2021 இறுதிக்குள் திருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த காலங்களில், PPF வைப்புத்தொகைக்கு அதிகபட்சமாக 12% வரை கூட வட்டி கிடைத்தது.

PPF முதிர்வு, முன்கூட்டியே மூடுதல் அல்லது திரும்பப் பெறுதல் விதிகள்

கணக்கு தொடங்கப்பட்ட நிதியாண்டின் முடிவில் இருந்து 15 ஆண்டுகள் முடிவடைந்தப் பிறகு PPF கணக்கு முதிர்ச்சியடைகிறது. PPF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கை முதிர்வுக்குப் பிறகு 5 வருடங்களாக நீட்டித்துக் கொள்ளலாம்.

15 ஆண்டுகளுக்கு முன் PPF கணக்கை முன்கூட்டியே மூடுவது பொதுவாக அறிவுறுத்தப்படுவதில்லை. இருப்பினும், மருத்துவ சிகிச்சை, குழந்தைகளின் உயர்கல்வி போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக 5 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு PPF கணக்கை முன்கூட்டியே மூடலாம்.

முதலீடு செய்யப்பட்ட 7 வது வருடத்தில் இருந்து, ஒரு வருடத்தில் ஒரு முறை பணம் திரும்ப பெற அனுமதிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், நான்காவது ஆண்டின் இறுதியில் அல்லது அதற்கு முந்தைய ஆண்டு எது குறைவாக இருந்தாலும், அதிகபட்ச திரும்ப பெறும் தொகை மீதித் தொகையில் 50% ஆக இருக்கலாம்.

PPF வட்டி விகிதம் 2022 கணக்கீடு

PPF வைப்புத்தொகைக்கான வட்டி மாதாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஆனால் நிதியாண்டின் இறுதியில் கணக்கில் வரவு வைக்கப்படும். ஒரு மாதத்தின் ஐந்தாவது மற்றும் கடைசி நாளுக்கு இடையே வட்டி கணக்கிடப்படுகிறது. எனவே வருமானத்தை அதிகரிக்க, நீங்கள் ஒரு மாதத்தின் 5வது நாளிலோ அதற்கு முன்னதாகவோ PPF கணக்கில் முதலீடு செய்ய வேண்டும். இதைச் செய்வதன் மூலம், முந்தைய மாதங்களின் இருப்புத் தொகையைத் தவிர, நடப்பு மாத இருப்புக்கான வட்டியைப் பெறுவீர்கள்.

நீங்கள் ஒரு வருடத்தில் ஒரு PPF கணக்கில் மொத்த தொகையை முதலீடு செய்தால், ஒரு நிதியாண்டின் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 5 வரை டெபாசிட் செய்வதே அதிகபட்ச வருமானத்திற்கான சிறந்த வழி.

PPF இன் சிறப்பு என்ன?

PPF சட்டப்பூர்வ பாதுகாப்பு பெறுகிறது. PPF கணக்கில் உள்ள உங்கள் பணத்திற்கான உத்தரவாதத்தின் அளவு, நீதிமன்ற உத்தரவு மூலம் கடன்களை செலுத்துவதற்கு இணைக்க முடியாது.

PPF கணக்கை எங்கு தொடங்குவது?

பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கை தபால் அலுவலகத்திலும் சில வங்கிகளிலும் தொடங்கலாம்.

ஒருவர் தனது பெயரில் ஒரு பிபிஎஃப் கணக்கை மட்டுமே தொடங்க முடியும். உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனியான PPF கணக்குகளைத் திறக்கலாம். உங்களைச் சார்ந்திருக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனித்தனியான PPF கணக்குகளைத் திறக்கலாம். எவ்வாறாயினும், வரிச் சலுகைகளுக்கு, இந்தக் கணக்குகளில் உங்களின் கூட்டுப் பங்களிப்பு ரூ. 1.5 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடாது.

ஒரு பெற்றோர் தனது சொந்த பெயரில் உள்ள கணக்கைத் தவிர, அவரது குழந்தையின் பெயரில் ஒரு தனி மைனர் PPF கணக்கைத் திறக்க அனுமதிக்கப்படுகிறார்.

PPF கணக்கு தொடங்குவதற்கான தகுதிகள்

ஒரு தனிநபர் எந்த வயதிலும் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கைத் திறக்க அனுமதிக்கப்படுகிறார். உங்கள் மைனர் குழந்தை/குழந்தைகளின் பெயரிலும் நீங்கள் PPF கணக்கைத் திறக்கலாம். HUFகள் PPF கணக்கைத் திறக்க அனுமதிக்கப்படுவதில்லை. NRI கள் PPF கணக்கை அவர்கள் நிரந்தரமாக வசிக்கும் இந்தியர்களாக இருந்தபோது கணக்கு தொடங்கினால் போதும்.

உங்களிடம் இரண்டு பிபிஎஃப் கணக்கு இருந்தால் என்ன செய்வது?

ஒரு நபர் தனது பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட PPF கணக்குகளை திறக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஒருவர் இரண்டு பிபிஎஃப் கணக்கைத் திறந்திருந்தால், அதில் ஒன்றை மூட வேண்டும். இரண்டு கணக்குகளிலும் உள்ள மொத்த வைப்புத்தொகை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வரம்பிற்குள் இருந்தால், முதலீட்டாளரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கணக்கில் அவற்றை இணைக்கலாம். ஒரு வருடத்தில் நிர்ணயிக்கப்பட்ட டெபாசிட் வரம்பான 1.5 லட்சத்தை விட அதிகமாக இருந்தால், கூடுதல் தொகை எந்த வட்டியும் இல்லாமல் கணக்குதாரருக்குத் திருப்பித் தரப்படும்.

இணைக்கப்பட வேண்டிய பிபிஎஃப் கணக்குகளில் ஏதேனும் கடன் நிலுவையில் இருந்தால், கணக்குகளை இணைப்பதற்கு முன் வைப்புதாரர் முழுத் தொகையையும் வட்டியுடன் சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டும்.

விதிகளின்படி, ஒரு வைப்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட பிபிஎஃப் கணக்குகளைத் திறந்திருந்தால், இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த கணக்குகள் ஒழுங்கற்றதாகக் கருதப்படும்.

PPF வைப்புத்தொகைக்கான வருமான வரிச் சலுகைகள்

PPF வைப்புத்தொகைகள் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளை அனுபவிக்கின்றன. இந்தப் பிரிவின் கீழ் நீங்கள் கோரக்கூடிய அதிகபட்ச விலக்கு ஒரு வருடத்தில் ரூ. 1.5 லட்சமாகும். பிரிவு 80C இன் கீழ் பலன்களை வழங்கும் வேறு சில திட்டங்களும் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வரிச் சலுகைக்காக, அத்தகைய அனைத்து திட்டங்களின் கீழும் ஒருங்கிணைந்த வைப்புத்தொகை ஒரு நிதியாண்டில் ரூ.1.5 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

PPF "விலக்கு-விலக்கு-விலக்கு (EEE)" வரி நிலைக்கு தகுதியுடையது. இதன்மூலம், முதலீட்டாளர்கள் PPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு (வருடாந்திர உச்சவரம்புக்கு உட்பட்டது), சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்ச்சியின் போது திரும்பப் பெறப்பட்ட தொகைக்கு வரி செலுத்தத் தேவையில்லை.

PPF முக்கிய அம்சங்கள்

இறையாண்மை உத்தரவாதம்

சட்டப் பாதுகாப்பு

முதலீடு, வட்டி மற்றும் வருமானத்திற்கு வரி இல்லை

கடன் வசதி

ஆண்டுக்கு 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம்.

PPFல் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம்

ஒரு வருடத்திற்கு PPF கணக்கில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ. 1.5 லட்சம் மற்றும் குறைந்தபட்ச டெபாசிட் தொகை ரூ. 500. உங்கள் PPF கணக்கில் வருடத்திற்கு 12 முறை பணத்தை டெபாசிட் செய்யலாம்.

டெலாய்ட் இந்தியாவின் பங்குதாரர் சுதாகர் சேதுராமன், கருத்துப்படி, தபால் நிலையங்கள் ஒரு நாளைக்கு 50,000 ரூபாய் வரை பணத்தை ஏற்றுக்கொள்கின்றன. பிபிஎஃப் கணக்கில் ரூ.1.5 லட்சத்துக்கும் அதிகமான ரொக்க வைப்புத்தொகை தற்போது பிபிஎஃப் அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று கூறுகிறார். இருப்பினும், பிபிஎஃப் கணக்கிற்கு ஆன்லைன் பணப் பரிமாற்றம் அனுமதிக்கப்படுகிறது. 50,000 ரூபாய் வரை பணம் இருந்தாலும், PPF கணக்கு வைத்திருப்பவர்கள் PPF கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு வங்கிகள் ஊக்கமளிக்கும் சில நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

PPF கடன் வசதி

PPF கணக்கு வைப்புகளுக்கு எதிராக நீங்கள் கடன் பெறலாம்.

PPF மீதான கடனுக்கு, வட்டி விகிதம் 1%. இருப்பினும், கடனை திருப்பிச் செலுத்தும் வரை PPF கணக்கு எந்த வட்டியையும் பெறாது. குறுகிய காலத்திற்கு ஒரு சிறிய தொகை தேவைப்பட்டால், நீங்கள் PPF இல் கடன் வாங்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

PPF வைப்புத்தொகைக்கு எதிரான கடன் தொகையானது, கடனுக்கு விண்ணப்பித்த ஆண்டிற்கு முந்தைய இரண்டாவது ஆண்டின் இறுதியில் கணக்கில் இருக்கும் தொகையில் 25% க்கு அதிகமாக இருக்கக்கூடாது.

PPF மீதான கடனை அனுமதித்த மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

மூன்றாவது நிதியாண்டு முதல் ஐந்தாம் நிதியாண்டு வரையிலான கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள தொகையில் 4 முதல் 6 ஆம் ஆண்டில் கடன் வசதியைப் பெறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Ppf
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment