Advertisment

PPF குறித்து தெரிந்து கொள்ள இவ்வளவு இருக்கிறதா?

குழந்தை 18 வயதுக்கு மேல் இருந்தால் குழந்தையின் பெயரில் ஆண்டுக்கு ரூபாய் 1.5 லட்சம் வரை தனியாக முதலீடு செய்யலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
post office savings scheme, PPF

பொது வருங்கால வைப்புத் நிதி (பிபிஎப்) என்பது நீண்ட கால முதலீட்டுக்கான சிறந்த கருவி. பாதுகாப்பான அதே சமயம் வரி இல்லாத பிபிஎப் என்பது ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்களுக்கான ஒரு நல்ல தேர்வு. இது அரசாங்கத்தை சார்ந்து இருப்பதால் இதில் ஆபத்தில்லை. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் இல்லாத, குறிப்பாக சுய தொழில் செய்பவர்கள் மற்றும் சிறிய தொழிலதிபர்களுக்கு இது மிக பொருத்தமானது. அமைப்பு சார்ந்து முறைகளுக்கு அணுகல் இல்லாதவர்கள் அவர்களுடைய நீண்ட கால இலக்குகளை இதன் மூலம் அடைய முடியும்.

Advertisment

பிபிஎப் பில் முதலீடு செய்ய சில குறிப்புகள்

வரம்பை அதிகரிங்கள்

குறிப்பாக பிபிஎப் கணக்கு ஒரு நீணட கால முதலீட்டு திட்டம் என்பதால், மீதியில் நீங்கள் ஈட்டும் 7.9 சதவிகித கூட்டுவட்டி உங்களுக்கு பல அதிசயங்களை செய்யு முடியும். ஆண்டு வரம்பாக ஒருவர் அதிகப்பட்சமான ரூபாய் 1.5 லட்சம் வரை தான் பிபிஎப் பில் முதலீடு செய்ய முடியும். உங்களுடைய ரூபாய் 1.5 லட்சம் வரி சேமிப்பு வரம்பை ஏற்கனவே எட்டி விட்டதால் இந்த முறையில் ரூபாய் 1.5 லட்சம் வரை முதலீடு செய்வது வீண் என்று நீங்கள் நினைக்கலாம். வெறும் வரி சேமிப்புக்காக மட்டும் இந்த முடிவை எடுக்காதீர்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வரை பிபிஎப் பில் முதலீடு செய்யுங்கள். நீங்கள் ஆண்டுக்கு ரூபாய் 1.5 லட்சம் என்ற அடிப்படையில் 15 ஆண்டுகள் பிபிஎப் பில் முதலீடு செய்தால் உங்கள் முதலீடு முதிர்ச்சியின் போது ரூபாய் 22 லட்சமாக வளரும். நினைவில் கொள்ளுங்கள் இது வரி இல்லாத பணம். மேலும் 30 சதவிகித வரி வகையோடு, இது வங்கி நிரந்தர வைப்பு திட்டத்தில் கிட்டதட்ட 11.5 சதவிகித வட்டி பெறுவதர்கு சமமானது.

மேலும் படிக்க : கிழிந்த ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது? எஸ்.பி.ஐயின் அறிவிப்பைப் பாருங்கள்!

வருவாயை பங்கிடுங்கள்

நீங்கள் பிபிஎப் கணக்கை உங்கள் மனைவி அல்லது குழந்தையின் பெயரில் திறக்கும் போது உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். பொதுவாக உங்கள் மனைவிக்கு நீங்கள் கொடுக்கும் அன்பளிப்பு பணம், முதலீடாக செய்யப்படும் போது, அதிலிருந்து கிடைக்கும் வருவாய் உங்களுடைய வருவாயோடு சேர்க்கப்படும், என வருமான வரி சட்டங்கள் கூறுகின்றன. ஆனால் பிபிஎப் வருவாய் வரி இல்லா வருவாய் என்பதால் அது உங்கள் வரி கடனை உயர்த்தாது.

குழந்தைகளுக்காக முதலீடு செய்யுங்கள்

குழந்தை 18 வயதுக்கு மேல் இருந்தால் குழந்தையின் பெயரில் ஆண்டுக்கு ரூபாய் 1.5 லட்சம் வரை தனியாக முதலீடு செய்யலாம். 18 வயது ஆனவுடன் குழநதைகளுக்கு தனி வருமானம் இருக்கலாம். உங்கள் குழந்தையின் கல்வி தேவைக்காக பிபிஎப் பில் நிதி சேர்ப்பது ஒரு சிறந்த வழி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment