நவராத்திரி, தசரா, தீபாவளி என பண்டிகைகளுக்கு மத்தியில் கனரா வங்கி நிரந்தர வைப்பு (ஃபிக்ஸட் டெபாசிட்) வட்டி விகிதங்களை 135 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது.
இந்தப் புதிய வட்டி வீதங்கள் அக்டோபர் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக கனரா வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி இப்போது ஏழு நாள்கள் முதல் 45 நாள்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 3.25 சதவீத வட்டி விகிதத்தையும், 46 நாள்கள் முதல் 90 நாள்களுக்குள் முதிர்ச்சியடையும் டெர்ம் டெபாசிட்டுகளுக்கு 4.25 சதவீதத்தையும் வழங்குகிறது.
மேலும், 91 நாள்கள் முதல் 179 நாள்கள் வரையிலான முதிர்வு காலம் கொண்ட கால வைப்புகளுக்கு இப்போது 4.5 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.
தொடர்ந்து, 180 நாள்கள் முதல் 269 நாள்கள் வரை முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு பொது மக்களுக்கு 5.9 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.4 சதவீதமும் வட்டி கிடைக்கும்.
வங்கியானது 270 நாள்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான டெபாசிட்களுக்கு பொது மக்களுக்கு 6 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.5 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஒரு வருட முதிர்வு காலத்துடன் கூடிய நிலையான வைப்புகளுக்கு, வங்கி பொது மக்களுக்கு 6.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஒரு வருடத்திற்கு மேல் மற்றும் இரண்டு வருடங்களுக்கும் குறைவான முதிர்வுக் காலத்திற்கான டெபாசிட்டுகளுக்கு இப்போது பொது மக்களுக்கு 6.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதமும் வட்டி விகிதம் கிடைக்கும்.
666 நாட்கள் முதிர்வு காலத்துடன் கூடிய நிலையான வைப்புகளுக்கு 7 சதவீதம் (பொதுமக்கள்) மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும்.
கனரா வங்கி இப்போது 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை முதிர்வு காலத்துடன் கூடிய நிலையான வைப்புத்தொகையில் பொது மக்களுக்கு 6.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதமும் வழங்குகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகளுக்கு குறைவான வைப்புகளுக்கு பொது மக்களுக்கு 6.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதமும் வட்டி விகிதம் கிடைக்கும்.
ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் 10 ஆண்டுகள் முதிர்வு கொண்ட நிலையான வைப்புகளுக்கு பொது மக்களுக்கு 7 சதவீதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும்.
இந்த வட்டி வீதங்கள் 5 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட ஒரு டெபாசிட்டுக்கு மட்டுமே பொருந்தும் என்று கனரா வங்கி தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“