பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஃபிக்சட் டெப்பாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 0.60 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம், மே 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நடவடிக்கை ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல கடன் வழங்குநர்கள், தங்களது வட்டி விகிதங்களை உயர்த்திய ஒரு நாளுக்குப் பிறகு வந்துள்ளது. ஆர்பிஐ தனது ரெப்போ வட்டி விகிதத்தில் 0.40 விழுக்காடு உயர்த்தியதையடுத்தி, பல வங்கி நிறுவனங்கள் வட்டியில் மாற்றம் கொண்டு வருகின்றன.
2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு வட்டி மாற்றப்பட்டுள்ளது. பொது வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சமாக 3% வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 5.25% வட்டி வழங்கப்படுகிறது
புதிய வட்டி விகிதம்:
- 7 - 14 நாட்கள் : 3%
- 15 - 29 நாட்கள் : 3%
- 30 - 45 நாட்கள் : 3%
- 46 - 90 நாட்கள் : 3.25%
- 91 - 179 நாட்கள் : 4%
- 180 - 270 நாட்கள் : 4.5%
- 271 நாட்கள் - 1 ஆண்டு : 4.5%
- 1 ஆண்டு : 5.1%
- 1 ஆண்டு - 2 ஆண்டு : 5.1%
- 2 ஆண்டு - 3 ஆண்டு : 5.1%
- 3 ஆண்டு - 5 ஆண்டு : 5.25%
- 5 ஆண்டு - 10 ஆண்டு : 5.25%
பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் அனைத்து திட்டங்களிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு 0.50% அதிக வட்டி வழங்கப்படுகிறது.
இதுதவிர, தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கான ரெப்போ-இணைக்கப்பட்ட கடன் விகிதம் (RLLR) ஜூன் 1 முதல் 6.5 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil