Advertisment

பஞ்சாப் நேஷனல் வங்கியின் FD வட்டி விகிதத்தில் மாற்றம்!

fixed deposit interest rate: மூத்த குடிமக்கள் தங்கள் வைப்புத்தொகையில் 0.5 சதவீத கூடுதல் வட்டி விகிதத்தை தொடர்ந்து பெறுவார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Banking news in tamil: can withdraw up rs.3 lakh only in punjab national bank

பஞ்சாப் நேஷனல் வங்கியில் முன்னதாக 7 முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வடையும் FD கணக்குகளுக்கு வட்டி விகிதம் 3% முதல் 5.25% வரை இருந்தது. 7 நாள் முதல் 45 நாள் வரையிலான FDக்கு 3 சதவீதமும், ஒரு வருடத்திற்கும் குறைவாக உள்ள FD கணக்கிற்கு - 4.5% வட்டியும் வழங்கப்பட்டது. தற்போது ஒன்று முதல் 3 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் கால வைப்புத்தொகையில், 5.10% வட்டி அளிக்கிறது. 5 முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடைந்த வைப்புத்தொகைகளுக்கு 5.25% வட்டியை வழங்குகிறது.
தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வட்டி விகிதமானது மே 1, 2021 முதல் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பஞ்சாப் வங்கியில் 2 கோடி ரூபாய்க்குள்ளான வைப்பு நிதிக்கு, பொதுமக்களுக்கான வட்டி விகிதம்

7 - 14 நாட்கள் - 3%
15 - 29 நாட்கள் - 3%
30 - 45 நாட்கள் - 3%
46 - 90 நாட்கள் - 3.25%
91 - 179 நாட்கள் - 4%
180 - 270 நாட்கள் - 4.4%
271 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 4.5%
1 வருடத்திற்கு - 5.10%
1 வருடத்திற்கு மேல் - 2 வருடத்திற்குள் - 5.10%
2 வருடத்திற்கு மேல் - 3 வருடத்திற்குள் - 5.10%
3 வருடத்திற்கு மேல் - 5 வருடத்திற்குள் - 5.25%
5 வருடத்திற்கு மேல் - 10 வருடத்திற்குள் - 5.25%

மூத்த குடிமக்களுக்கு கூடுதலான 0.5% வட்டி விகிதம் வழக்கம்போல தொடரும். 7 நாட்கள் முதல் - 10 வருடம் வரையிலான இந்த டெபாசிட்களுக்கு 3.5% முதல் 5.75% வரை வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. ஆக்ஸிஸ் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட சில வங்கிகளும் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்துள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Fixed Deposits Punjab National Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment