Punjab & Sind Bank FD: பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது.
அரசுக்கு சொந்தமான இந்த வங்கி சமீபத்தில் இரண்டு கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை திருத்தியுள்ளது.
வங்கியின் இணையதளத்தின்படி, இந்த விகிதம் ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும். ஜூலை 1 முதல் இந்த வங்கியில் நிலையான வைப்புகளுக்கு 2.8 முதல் 7.10 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேதி நீட்டிப்பு
மேலும், 601 மற்றும் 400 நாள்களுக்கான சிறப்பு வைப்புத்தொகை முதலீடு செப்டம்பர் 30, 2023 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
வட்டி விகிதங்கள்
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் ஏழு முதல் 30 நாள்களுக்குள் இரண்டு கோடி ரூபாய்க்கு குறைவாக முதலீடு செய்தால் 2.8 சதவீத வட்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 31 முதல் 45 நாள்களுக்கு முதலீடுகளுக்கு 3 சதவீத வட்டி கிடைக்கும். நீங்கள் 46 முதல் 90 நாள்களுக்கு நிலையான வைப்பு செய்தால், உங்களுக்கு 4.6 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.
91 முதல் 179 நாள்கள் வரை 4.75 சதவீத வட்டியும், 180 முதல் 364 நாள்கள் வரையிலான நிலையான வைப்புகளுக்கு 6 சதவீத வட்டி கிடைக்கும்.
ஒரு வருடம் முதல் 399 நாட்கள் வரையிலான முதலீடுகளுக்கு 6.4 சதவீத வட்டி கிடைக்கும். 400 நாட்கள் சிறப்பு நிலையான வைப்புத்தொகைக்கு 7.1 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். தொடர்ந்து, 401 முதல் 554 நாள்களுக்கு முதலீட்டில் 6.4 சதவீதம் கிடைக்கும்.
மேலும், முதலீடு 555 நாட்களுக்கு 7.35 சதவீத வட்டி விகிதத்தை பெறும். 601 நாட்களுக்கு நிலையான வைப்புகளுக்கு 7 சதவீத வட்டி கிடைக்கும். 602 நாட்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை 6.4 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.
6.75 சதவீத வட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு நாள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு குறைவாக உள்ளது. முதலீடு மூன்று ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை 6.25 சதவீதம் வட்டி பெறும்.
மூத்தக் குடிமக்கள்
மூத்த குடிமக்களுக்கு இந்த வங்கியில் கூடுதலாக 0.5 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். மறுபுறம், மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வு பெறாதவர்களுக்கு, இந்த வங்கி குறிப்பிட்ட கால வைப்புகளுக்கு 0.15 சதவீத சிறப்பு வட்டி விகிதத்தை வழங்குகிறது.
அடிப்படையில் வாடிக்கையாளர்கள் 400, 555 மற்றும் 601 நாள்களுக்கு இந்த அதிக வட்டி விகிதத்தைப் பெறுவார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“