ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மின்சார இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான PURE EV, திங்கள்கிழமை (ஜன.30) தனது புதிய மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை ரூ.99 ஆயிரத்து 999 ஆகும்.
இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஒரு சார்ஜில் 135 கிமீ ரைடிங் ரேஞ்சை வழங்கும்.
பேட்டரி வரம்பு
புதிய PURE EV ecoDryft ஆனது AIS 156 சான்றிதழ் பெற்றுள்ள 3.0 kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 135 கிமீ ரைடிங் ரேஞ்சை வழங்கும்.
-
பியூர் இவி எகோடிரைஃப்ட்
இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் 3 கிலோவாட் மின்சார மோட்டார் உள்ளது மற்றும் மணிக்கு 75 கிமீ வேகத்தில் செல்லும்.
வடிவமைப்பு, கலர்
இது கோண ஹெட்லேம்ப், ஐந்து-ஸ்போக் அலாய் வீல்கள், ஒற்றை-துண்டு இருக்கை போன்றவற்றைக் கொண்டுள்ளது.
இந்த மின்சார மோட்டார்சைக்கிள் நான்கு வண்ண வகைகளில் கிடைக்கும். அவை கறுப்பு, சாம்பல், நீலம் மற்றும் சிவப்பு ஆகும்.
மார்ச் மாதம் புக்கிங்
இது குறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஹித் வதோரா கூறுகையில், “இந்த பைக் நாடு முழுக்க வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
-
பியூர் இவி எகோடிரைஃப்ட்
நாடு முழுக்க உள்ள டீலர்களின் தொடக்க புக்கிங் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/