நகை மற்றும் சொத்து ஆவணங்கள் போன்ற மதிப்புமிக்க பொருட்களை சேமிப்பதற்காக மக்கள் பெரும்பாலும் வங்கிகளில் உள்ள பாதுகாப்பான லாக்கர்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் வங்கி லாக்கரில் உள்ள உங்கள் உடமைகள் தொலைந்து போனால் என்ன ஆகும் தெரியுமா? முன்னதாக, உங்கள் லாக்கரில் உள்ள பொருட்களின் இழப்புக்கு வங்கிகள் பொறுப்பல்ல. நீங்கள் அவர்களிடமிருந்து நிதி இழப்பைக் கோர முடியாது. லாக்கர்கள் உடைக்கப்பட்ட வங்கி திருட்டு சம்பவங்கள் நிறைய உள்ளன. இருப்பினும், லாக்கர் உரிமையாளர்களுக்கு அந்த இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.
இதை சரிசெய்ய, ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு புதிய விதியை அறிவித்தது, இது திருட்டு, தீ, வங்கி மோசடி போன்றவற்றால் சொத்துக்களை இழந்தால் லாக்கர் வைத்திருப்பவர்கள் ஆண்டு லாக்கர் வாடகைக்கு 100 மடங்கு இழப்பீடு கோரலாம்.
லாக்கர்களின் பாதுகாப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களை பார்க்கலாம்.
உங்கள் லாக்கர் பொருட்களின் பதிவுகளை வைத்திருங்கள்
உங்கள் மதிப்புமிக்க பொருட்களின் பட்டியலை பாதுகாப்பாக வைத்திருங்கள். லாக்கரிலிருந்து பொருட்களை வைக்கும்போது அல்லது எடுக்கும்போது, உங்கள் பட்டியலை சரி செய்துக் கொள்ளவும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, நீங்கள் லாக்கரை அணுக முடியாமல் போகலாம், அதனால் நீங்கள் சேமித்ததை மறந்துவிடலாம். எனவே இந்த பட்டியலை வைத்திருப்பது உங்கள் மதிப்புமிக்க பொருட்களை கண்காணிக்க உதவும். சில சூழ்நிலைகளில், உங்கள் லாக்கரில் இருந்து ஒரு பொருள் காணாமல் போனால், அதை அடையாளம் காண இந்த பட்டியல் உதவும்.
வருடத்திற்கு ஒரு முறையாவது லாக்கரை அணுகவும்
லாக்கர் வைத்திருப்பவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது தங்கள் லாக்கர்களை திறந்து பார்க்க வேண்டும், இல்லையெனில் உங்கள் லாக்கர் ஒப்பந்தத்தில் உள்ள நெறிமுறைகளைப் பயன்படுத்தி அவற்றைத் திறக்க வங்கிகள் அனுமதிக்கப்படுகின்றன. வங்கிகள் அத்தகைய நடவடிக்கை எடுப்பதற்கு முன், லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் லாக்கர் கணக்குகள் செயலிழக்கும்போது போதுமான அறிவிப்பை வங்கிகள் அனுப்ப வேண்டும். லாக்கர் வைத்திருப்பவர்கள் கணக்கை பயன்படுத்தாததற்கான சரியான காரணத்தை வழங்க வேண்டும். காரணம் சரியானதா இல்லையா என்பதை வங்கிகள் முடிவு செய்யலாம். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க, ஒருவர் குறிப்பிட்ட கால இடைவெளியில் லாக்கர் கணக்கை செயலில் வைக்க வேண்டும்.
வங்கியிலிருந்து ஒப்பந்த நகலைப் பெறுங்கள்
தற்போதுள்ள லாக்கர் வைத்திருப்பவர்களுக்கு புதிய லாக்கர் விதிகள் உடனடியாக பொருந்தாது. வங்கிகள் தற்போதைய வாடிக்கையாளர்களுடனான ஒப்பந்தங்களை ஜனவரி 1, 2023 முதல் புதுப்பிக்க வேண்டும். புதிய லாக்கர்களில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1, 2022 முதல் புதிய விதிகள் பொருந்தும். வங்கிகள் நியாயமான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் உறுதி செய்யும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் நீங்கள் உங்கள் லாக்கர் ஒப்பந்தத்தை கவனமாக படிக்க வேண்டும் மற்றும் அதன் நகலை எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும்.
லாக்கர் கட்டணங்களை சரியான நேரத்தில் செலுத்துங்கள்
புதிய விதிகளின்படி, புதிய வாடிக்கையாளர்களிடமிருந்து கால வைப்புத்தொகையைப் பெற ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. லாக்கர்களை ஒதுக்கீடு செய்யும் போது, அத்தகைய வைப்புத்தொகை மூன்று வருடங்கள் வரை லாக்கர் வாடகையை மீட்பதற்கு பயன்படுத்தப்படலாம். இருப்பினும், வாடிக்கையாளருக்கு திருப்திகரமான வங்கி இருப்பு இருந்தால், வங்கிக்கு கூடுதலாக வைப்புத் தொகை தேவையில்லை. நீங்கள் மூன்று வருடங்களுக்கு வாடகை செலுத்தத் தவறினால், வங்கி தனது விருப்பப்படி லாக்கரைத் திறக்கலாம். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க உங்கள் லாக்கர் வாடகையை சரியான நேரத்தில் செலுத்துவது விவேகமானது.
மதிப்புமிக்க பொருட்களை வீடு மற்றும் லாக்கருக்கு இடையில் பிரிக்கவும்
வங்கி லாக்கர்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால் இது உண்மையல்ல, எப்போதும் அபாயங்கள் உள்ளன என்பது எங்களுக்குத் தெரியும், மேலும் இழப்புகளுக்கும் போதுமான அளவு ஈடுசெய்யப்படாமல் போகலாம். எனவே, உங்கள் விலைமதிப்பற்ற பொருட்களை வீடு மற்றும் வங்கி லாக்கருக்கு இடையில் பிரித்து, அவற்றில் ஒன்றில் அனைத்து மதிப்புமிக்க பொருட்களையும் வைத்திருப்பதைத் தவிர்க்கலாம். உங்கள் லாக்கரில் உள்ள மதிப்புமிக்க பொருட்கள் உங்கள் வருடாந்திர லாக்கர் வாடகைக்கு 100 மடங்கு அதிகமாக இருக்கக்கூடாது. மீதமுள்ளவை உங்கள் வீட்டில் பாதுகாப்பான இடத்தில், உயர்தர வீட்டு லாக்கரில் வைத்துக் கொள்ளுங்கள்.
மேற்கூறியவற்றைத் தவிர, உங்கள் மதிப்புமிக்க பொருட்களுக்கு எதிராக நீங்கள் ஒரு காப்பீட்டுக் கொள்கையையும் எடுக்கலாம். காப்பீடு என்பது திருட்டு, தீ, கொள்ளை போன்றவற்றின் மதிப்பு இழப்பிலிருந்து பாதுகாக்க சிறந்த வழிகளில் ஒன்றாகும். காப்பீட்டு நிறுவனம் உங்கள் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்து ஆய்வு செய்யும் உங்கள் வங்கி லாக்கரிலும் உங்கள் வீட்டு லாக்கரிலும் வைத்திருக்கும் பொருட்களுக்கு காப்பீடு வாங்கலாம். இருப்பினும், பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் உரிமைகோரல் தீர்வுக்கான வாய்ப்புகள் அதிகம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.