Advertisment

IRCTC News: ஐஆர்சிடிசியில் மாதம் ரூ80,000 வரை சம்பாதிக்கும் பொன்னான வாய்ப்பு!

ஐஆர்சிடிசி ஏஜென்ட்டாக பணிபுரிந்து, மாதம் 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கும் பிராசஸை இச்செய்தி தொகுப்பில் காணலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC News: ஐஆர்சிடிசியில் மாதம் ரூ80,000 வரை சம்பாதிக்கும் பொன்னான வாய்ப்பு!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு , கேட்டரிங் சேவைகள் போன்ற பல வசதிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறது. கூடுதலாக மாதம் 80 ஆயிரம் ரூபாய் வரை பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் ஐஆர்சிடிசி வழங்குகிறது.

Advertisment

இதற்காக எங்கும் போக வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலிருந்தப்படியும் நீங்கள் சம்பாதிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்தின் (IRCTC website) மூலம் ஒரு ஏஜென்ட்டாக பணிபுரிய வேண்டும்.

ஐஆர்சிடிசி ஏஜென்ட் கமிஷன் தொகை என்ன?

ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) ஏஜென்ட்டாக டிக்கெட் புக் செய்து கொடுத்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ .20 கமிஷனும், ஏ.சி வகுப்பு டிக்கெட்டை முன்பதிவு செய்தால் டிக்கெட்டுக்கு ரூ .40 வரையும் கிடைக்கும். இதுதவிர, டிக்கெட் விலையின் ஒரு விழுக்காடு தொகை ஏஜென்ட்க்கு செல்லும்.

இதில் சிறந்த அம்சம் என்னவென்றால்,டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஏஜென்ட்டுக்கு வரம்பு எதுவும் இல்லை. அவர் விரும்பினால், அவர் ஒரு மாதத்தில் எத்தனை டிக்கெட் வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம்.

மேலும், தட்கல் டிக்கெட்டுகளை 15 நிமிடங்களில் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. ரயில் டிக்கெட்ட மட்டுமின்றி ஏஜென்ட் சார்பில் விமானம், பேருந்து, ஹோட்டல், ப்ரீபெய்ட் ரீசார்ஜ் போன்றவற்றிற்கான டிக்கெட்டுகளையும் பதிவு செய்யலாம்

ஐஆர்சிடிசி ஏஜென்ட் சம்பாதிப்பது எவ்வளவு

ஒரு மாதத்தில் இவ்வுளவு தான் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என வரம்பும் கிடையாது. ஒவ்வொரு முன்பதிவு மற்றும் பரிவர்த்தனைக்கும் தனித்தனியான கமிஷனைப் பெறுவார்கள். இதில் ஒரு ஏஜென்டாக, மாதத்திற்கு ரூ .80,000 வரை பெறலாம். சராசரியாக ஒருவர் மாதத்திற்கு ரூ. 40 ஆயிரம் முதல் 50,000 வரை சம்பாதிக்க முடியும்.

ஐஆர்சிடிசி ஏஜென்ட் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்

  • ஒரு வருட ஏஜென்சிக்கு, ரூ .3,999 வசூலிக்கப்படும்
  • இரண்டு வருட ஏஜென்சிக்கு, ரூ .6,999 வசூலிக்கப்படும்.
  • ஏஜென்ட் அதிகபட்சமாக 100 டிக்கெட்டுகளை பதிவு செய்தால் டிக்கெட்டுக்கு ரூ .10 கட்டணம் வசூலிக்கப்படும்.
  • அதே நேரம், 101 முதல் 300 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ .8 கட்டணம் வசூலிக்கப்படும்.
  • ஒரு மாதத்திற்கு 300 டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்ய ஒரு டிக்கெட்டுக்கு ரூ .5 வசூலிக்கப்படும்.

ஐஆர்சிடிசி ஏஜென்ட் அப்ளை செய்வது எப்படி

  • முதலில் ஆன்லைனில் பதிவு படிவத்தை நிரப்ப வேண்டும்
  • தொடர்ந்து, கையொப்பமிடப்பட்ட விண்ணப்ப படிவம், declaration form-களுடன்ள் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை அனுப்ப வேண்டும்.
  • ஆவணங்களின் சரிபார்ப்பு முடிந்தவுடன், IRCTC ID உருவாக்குவதற்காக 1,180 ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என தகவல் திரையில் தோன்றும்
  • தொடர்ந்து மொபைலுக்கு வரும் ஒடிபி எண்ணை பதிவிட வேண்டு. அந்த பிராசஸ் முடிவடைந்ததும்,உங்கள் பெயரில் டிஜிட்டல் சான்றிதழ் உருவாக்கப்படும்.
  • டிஜிட்டல் சான்றிதழைப் பெற்ற பிறகு, ஐஆர்சிடிசி கட்டணத்தை டெபாசிட் செய்ய அறிவிப்பு வரும்.
  • கட்டணம் டெபாசிட் செய்யப்பட்டவுடன், ஐஆர்சிடிசி ஐடி, பாஸ்வேர்டு போன்ற லாகின் விவரங்கள் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

தேவையான ஆவணங்கள்

  • பான் கார்டு
  • ஆதார் கார்டு
  • மொபைல் நம்பர்
  • இமெயில் ஐடி
  • போட்டோ
  • அலுவலக முகவரி சான்றிதழ்
  • வீட்டு முகவரி சான்றிதழ்
  • Declaration form
  • ரெஜிஸ்ட்ரேஷன் படிவம்

இந்த வழிமுறைகளை பின்பற்றி, ஐஆர்சிடிசியின் ஏஜென்டாக மாறி ஒரே இடத்தில் இருந்து மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment