Advertisment

காலமானார் பங்குச் சந்தை முதலீட்டு காளை: யார் இந்த ஜுன்ஜுன்வாலா?

ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பெரிய முதலீட்டு பங்குகளில் டைட்டன் நிறுவனமும் அடங்கும்.

author-image
WebDesk
New Update
Rakesh Jhunjhunwala From Titan to Tata Motors

பங்குச் சந்தை முதலீட்டு காளை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

பங்கு சந்தையில் முதலீட்டு காளை என வர்ணிக்கப்பட்ட ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இன்று (ஆகஸ்ட் 14) காலமானார்.

Advertisment

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா 1980ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினார். அவரது சொத்து மேலாண்மை நிறுவனமான RARE Enterprises மூலம் தனது போர்ட்ஃபோலியோவை நிர்வகித்தார்.

ஜுன்ஜுன்வாலா ஐந்து வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனங்கள் தவிர மூன்று நிறுவனங்களில் இயக்குநராக இருந்தார். அந்த நிறுவனங்கள் RARE Equity Private ltd, RARE Family Foundation மற்றும் HOPE Film Makers ஆகும்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பங்குச் சந்தை முதலீடுகள் $5.8 பில்லியன் (சுமார் ரூ. 46,000 கோடி) ஆகும். ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பெரிய முதலீட்டு பங்குகளில் டைட்டன் நிறுவனமும் அடங்கும்.

அங்கு அவர் தனது மனைவி ரேகாவுடன் 5.05 சதவீத பங்குகளை வைத்திருந்தார். அவர் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 1.09 சதவீத பங்குகளை வைத்துள்ளார், மேலும் அவரது மனைவியுடன் சேர்ந்து கிரிசில் நிறுவனத்தில் 5.48 சதவீத பங்குகளையும், பெடரல் வங்கியில் 3.64 சதவீத பங்குகளையும் வைத்துள்ளார்.

இவரை சக முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை காளை என்றே வர்ணித்தனர். பங்குச் சந்தையில் காளை குறியீடு லாபத்தை குறிக்கும். அந்த வகையில் பங்குச் சந்தையில் வெற்றியாளராக திகழ்ந்தர் இந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Sensex
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment