1980-90களில் பெரும் வரவேற்பை பெற்ற கூல் டிரிங்ஸ் தயாரிப்பான ரஸ்னா நிறுவனர் அரீஷ் பைரோஜ்ஷா கம்பட்டா ( Areez Pirojshaw Khambatta) காலமானார். அவருக்கு வயது 85.
அரீஷ் பைரோஜ்ஷா கம்பட்டா, அகமதாபாத் பார்சி பஞ்சாயத்தின் முன்னாள் தலைவராகவும், இந்தியாவின் பார்சி ஜோராஸ்ட்ரியன் அஞ்சுமான்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும் இருந்தார்.
நாட்டில் 1.8 மில்லியன் சில்லறை விற்பனை நிலையங்களில் விற்கப்படும் ரஸ்னா என்ற ஐகானிக் பான பிராண்டை உருவாக்கியது இவர்தான்.
இந்த நிலையில், “தொழில்துறையில் இவரின் இழப்பு பேரிழப்பு என்றும் சமூக வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை அளித்தவர்” என்றும் இரங்கல் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ரஸ்னா இப்போது உலகெங்கிலும் 60 நாடுகளில் விற்கப்படுகிறது மற்றும் பன்னாட்டு நிறுவனங்களால் (MNCs) ஆதிக்கம் செலுத்தும் பானங்களின் பிரிவில் எப்போதும் சந்தையில் முன்னணியில் உள்ளது.
இவர், அதிக விலைக்கு விற்கப்படும் குளிர்பானப் பொருட்களுக்கு மாற்றாக 1970களில் மலிவு விலையில் ரஸ்னாவின் குளிர்பானமான ரஸ்னாவை உருவாக்கினார்.
இது 1980-90ஸ் கிட்ஸ்களின் பேவரேட் பானமாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil