டாடா குழுமம் 18,000 கோடி ரூபாய்க்கு தேசிய விமான நிறுவனத்திற்கான ஏலத்தை பெற்ற பிறகு, டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜே.ஆர்.டி டாடா ஏர் இந்தியா விமானத்தில் இருந்து கீழே இறங்கிய புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தைப் பற்றி டாடா குறிப்பிடுகையில், “டாடா குழுமம் ஏர் இந்தியாவுக்கான ஏலத்தை வென்றது ஒரு நல்ல செய்தி! ஏர் இந்தியாவை மீண்டும் கட்டியெழுப்ப கணிசமான முயற்சிகள் தேவைப்படும் என்றாலும், டாடா குழுமம் விமானத் துறையில் இருப்பதற்கு இது ஒரு வலுவான சந்தை வாய்ப்பை வழங்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உணர்வுபூர்வமாக குறிப்பிட்டுள்ள டாடா குழுமம், “ஏர் இந்தியா, ஜே.ஆர்.டி. டாடா தலைமையில் ஒரு காலத்தில் உலகின் மிகவும் மதிப்புமிக்க விமான நிறுவனங்களில் ஒன்றாக புகழ் பெற்ரிருந்தது. டாடாக்கள் முந்தைய ஆண்டுகளில் அனுபவித்த இமேஜையும் நற்பெயரையும் மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். ஜே.ஆர்.டி. டாடா இன்று அவர் நம் மத்தியில் இருந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார்.” டாடா அறிக்கையை ட்வீட் செய்துள்ளது.
“தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்களை தனியார் துறைக்கு திறக்கும் அரசின் சமீபத்திய கொள்கைக்கு நாங்கள் அரசாங்கத்தை அங்கீகரித்து நன்றி தெரிவிக்க வேண்டும்.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா 1932ல் டாடா குழுமத்தால் நிறுவப்பட்டது. 1953ல் தேசியமயமாக்கப்பட்டது. 2007ல் உள்நாட்டு ஆபரேட்டரான இந்தியன் ஏர்லைன்ஸுடன் இணைந்ததிலிருந்து நஷ்டத்தில் இயங்கி வந்தது.
டாடா குழுமம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் சேர்ந்து கடந்த பல சந்தர்ப்பங்களில் இந்த விமான நிறுவனத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டியது ஆனால், பல காரணிகள் ஒன்றாக வந்ததால் கடைசி கட்டத்தில் ஏலம் திரும்பப் பெறப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”