இந்திய ரிசர்வ் வங்கி செப்டம்பர் 13 அன்று வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யும்போது பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) புதுப்பிப்பின் பெயரில் பல வங்கி வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதாக ரிசர்வ் வங்கிக்கு பல புகார்கள் வந்ததையடுத்து இந்த எச்சரிக்கை அறிவிப்பு வந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, உள்நுழைவு விவரங்கள், அட்டை விவரங்கள், பின் மற்றும் OTP, எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பகிருமாறு கேட்டுக்கொள்ளப்படுவதன் மூலம் ஆன்லைன் மோசடிகள் நடக்கிறது. KYC புதுப்பிப்புக்காக ஒரு இணைப்பை அனுப்பி, அங்கீகரிக்கப்படாத அல்லது சரிபார்க்கப்படாத ஆப்களை நிறுவுமாறு சில மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் கேட்கலாம். இதன் மூலம் உங்கள் பணம் பறிபோகலாம் என்று எச்சரித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்கள் தங்கள் KYC விவரங்களைப் புதுப்பிக்கவில்லை என்றால், அவர்களின் கணக்கு முடக்கப்படலாம், தடுக்கலாம் அல்லது மூடலாம், அதனால் வாடிக்கையாளர் தகவல்களைப் பகிர வேண்டும் என்று மோசடி கும்பல் கேட்கின்றனர். இதனால் வாடிக்கையாளர் தனது தகவலை அழைப்பு, செய்தி அல்லது சட்டவிரோத செயலி மூலம் பகிர்ந்து கொள்வதன் மூலம், மோசடி செய்பவர்கள் அவரது கணக்கை அணுகி வாடிக்கையாளரை ஏமாற்றலாம் என்று கூறியுள்ளது.
எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு உள்நுழைவு விவரங்கள், தனிப்பட்ட தகவல்கள், KYC ஆவணங்களின் நகல், அட்டை விவரங்கள், PIN, கடவுச்சொல் மற்றும் OTP போன்றவற்றை தெரியாத நபர்கள் அல்லது ஏஜென்சிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் KYC ஐ அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும் ஆனால் தற்போது இந்த செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil