செப்டம்பரில் எத்தனை நாள் வங்கி விடுமுறை?

Bank Holidays In September: செப்டம்பர் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் செயல்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் துவங்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அந்த மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 12 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விடுமுறை தின பட்டியலை வெளியிட்டுள்ளது. எனவே, வங்கி விடுமுறைகளை பொறுத்து வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதால், ஆக மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

செப்., 5, 12, 19, 26ம் தேதிகளில் ஞாயிறு விடுமுறை. செப்., 11ம் தேதி, 2வது சனிக்கிழமை மற்றும் விநாயகர் சதுர்த்தி, 25ம் தேதி 4வது சனிக்கிழமை.
செப்., 8ம் தேதி – ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதியை முன்னிட்டு கவுகாத்தியில் வங்கிகள் செயல்படாது.
செப்., 9ம் தேதி – தீஜ் தினத்தை முன்னிட்டு ஹரித்தாலிகா மற்றும் கேங்டாக் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.
செப்., 10ம் தேதி – விநாயகர் சதுர்த்தி பண்டிகையை தொடர்ந்து அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர், பனாஜி உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் மூடப்படும்.
செப்., 17ம் தேதி – கர்ம பூஜையை முன்னிட்டு ராஞ்சியில் வங்கிகள் இயங்காது.
செப்., 20ம் தேதி – இந்திரஜத்ரா பண்டிகை காரணமாக கேங்டாக் பகுதியில் வங்கிகள் செயல்படாது.
செப்., 21ம் தேதி – ஸ்ரீ நாராயண குரு சமாதி நாளை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rbi announced bank holidays in september month

Next Story
தினசரி ரூ.50 முதலீடு செய்து ஓய்வு காலத்தில் ரூ.1 கோடி வருமானம் பெறுங்கள்!mutual funds, mutual fund tips, மியூச்சுவல் ஃபண்ட்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express