இந்த ஆப் டவுன்லோட் செய்தால், அக்கவுன்ட்டில் பணம் இருக்காது! எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி

உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள ஒட்டுமொத்த பணமும் சில மணி நிமிடங்களில் காலியாகிவிடும்

Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates

ரிசர்வ் வங்கி உங்களை எச்சரிக்கிறது.

ஆம்! “AnyDesk” என்ற ஆப்-ஐ பதிவிறக்கம் செய்யக் கோரி சமூக தளங்கள் வாயிலாகவோ, அல்லது வேறு தளம் மூலமாகவோ செய்தி வந்தால், அதனை செய்ய வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இந்த ஆப்-ஐ டவுன்லோட் செய்தால், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள ஒட்டுமொத்த பணமும் சில மணி நிமிடங்களில் காலியாகிவிடும். “AnyDesk” என்பது ஒரு மென்பொருள். இதன் மூலம், உங்கள் மொபைல் அல்லது லேப்டாப் மூலம் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். பிப்.14ம் தேதி, ரிசர்வ் வங்கி விடுத்த எச்சரிக்கையில், UPI வழித்தடம் மூலம் சில மோசடி பரிவர்த்தனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன் வாடிக்கையாளர்களை குறிவைத்து, “AnyDesk” ஆப்-ஐ இன்ஸ்டால் செய்ய வைக்க வேலை நடந்து வருகிறது. ஒருமுறை இதனை டவுன்லோட் செய்துவிட்டால், மற்ற ஆப்களில் இறுதியாக கேட்கப்படும் ஆக்சஸ்(access) அனுமதி கேட்கப்படும். நாமும், மற்ற ஆப்களுக்கு கண்ணை மூடிக் கொண்டு ஓகே, ஓகே என்று கொடுப்பது போல், இதற்கும் கொடுத்தால், பணம் முழுவதும் வாடிக்கையாளரின் அனுமதியோடே திருடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“AnyDesk” ஆப் டவுன்லோட் செய்யப்பட்டவுடன் 9 இலக்கு எண் கிடைக்கும். அதனை, அந்த சைபர் கிரிமினல்கள், வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி பெற்று விடுவார்கள். அந்த நம்பரை பெற்றுவிட்டால், உங்கள் மொபைலின் செயல்பாடு ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rbi anydesk warning

Next Story
IMPS மூலம் பணம் அனுப்ப எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது தெரியுமா?Charges Levied By Key Banks For Immediate Payment Service (IMPS) - IMPS மூலம் பணம் அனுப்ப எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது தெரியுமா?Charges Levied By Key Banks For Immediate Payment Service (IMPS) - IMPS மூலம் பணம் அனுப்ப எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது தெரியுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com